- Advertisement -
Homeபொழுதுபோக்குநான்கு நாட்களில் கூலி திரைப்படம் எவ்வளவு ரூபாய் வசூலித்துள்ளது தெரியுமா... முழு விவரங்கள் இதோ...

நான்கு நாட்களில் கூலி திரைப்படம் எவ்வளவு ரூபாய் வசூலித்துள்ளது தெரியுமா… முழு விவரங்கள் இதோ…

- Advertisement -

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் இருப்பதும், லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருப்பதும்தான் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய புள்ளியாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன் சோபின் ஷாகிர் சத்யராஜ் உபேந்திரா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தார்கள்.

பாலிவுட் நடிகர் அமீர் கானும் படத்தில் கேமியோ ரோலில் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை. முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டுமே சுமாராகத்தான் இருப்பதாகவும், இது லோகேஷ் கனகராஜின் படமே அல்ல என்றும் பலரும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.

மிக முக்கியமாக கூலி திரைப்படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனம்தான் சுற்றி சுற்றி வந்தது. படத்தைப் பார்த்துவிட்ட பலரும் இணையத்தில் அந்த திரைப்படம் குறித்த கேள்விகளை எழுப்பி வந்தனர். அதேசமயம் படத்தை பார்த்த சிலர் நன்றாகவே இருப்பதாகவும், இணையத்தில் வரம்பு மீறி கிண்டல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.

சூர்யாவின் ரெட்ரோ மற்றும் கமல்ஹாசனின் தக் லைப் படத்திற்கு அமைந்தது போலவே, இந்தத் திரைப்படத்தையும் கிண்டல் செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் வசூல் என்பது தற்போது வரை திருப்திகரமாகவே இருப்பதாக சினிமா விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

கூலி திரைப்படம் முதல் நாளில் மட்டும் 151 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேசமயம் உள்நாட்டில் இந்த திரைப்படத்தின் வசூல் என்பது நான்கு நாட்களில் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல் நாளில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்த்தே 65 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

படம் வெளியான நான்கு நாட்களை சேர்த்து, 193 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு வசூலையும் சேர்த்து பார்க்கும் போது நிச்சயம் கூலி திரைப்படம் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், டிஜிட்டல் உரிமம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பார்க்கும் பொழுது நிச்சயம் 400 கோடி ரூபாய் வரைக்கும் இந்த திரைப்படம் லாபம் பார்த்திருக்கும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சற்று முன்