- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டமா? அவரோட பேரு இப்படித்தான் டைட்டில் கார்டுல வரும் - வெங்கட்...

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டமா? அவரோட பேரு இப்படித்தான் டைட்டில் கார்டுல வரும் – வெங்கட் பிரபு அளித்த பதில்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் “லியோ” திரைப்படமானது வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸாக இருக்கிறது. ஏற்கனவே பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் அடுத்ததாக வெளியாக இருக்கும் “லியோ” படம் மீண்டும் விஜய்யை வெற்றி பாதைக்கு திருப்பும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதோடு இந்த படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் நிச்சயம் இந்த படம் இந்திய அளவில் பேசப்படும் ஒரு பெரிய படமாகவும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக நிறைவு செய்த நடிகர் விஜய் சமீபத்தில் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் லண்டனில் சில நாட்கள் தங்கும் விஜய் அதன்பிறகு மீண்டும் இங்கு வந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த லியோ படத்திற்கு அடுத்து தளபதி விஜய் வெங்கட் பிரபு உடன் இணைந்து “தளபதி 68” படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

விரைவில் விஜய் அரசியலில் முழு நேரமாக களமிறங்க இருப்பதினால் சினிமாவிலிருந்து சற்று பிரேக் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த விஜய் 68 படத்திற்கு பின்னரே விஜய்யின் அரசியல் குறித்த அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த கதைக்கான இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டதால் நிச்சயம் லியோ படம் ரிலீசுக்கு பிறகு உடனடியாக விஜய் இந்த படத்தில் நடிக்க துவங்குவார் என்று தெரிகிறது.

VP-and-Vijay

ஏற்கனவே மாநாடு படம் மூலமாக பெரிய ஹிட் கொடுத்திருந்த வெங்கட் பிரபு தற்போது மீண்டும் அரசியல் கதைகளத்தை மையமாக வைத்து விஜய் படத்தை எடுக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது போன்ற சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்திப்பில் கலந்துகொண்ட தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில் : லியோ படம் வெளியான பிறகு தான் என்னுடைய புதிய படத்திற்கான அப்டேட்டுகள் வெளிவரும். இது ஒரு ஜாலியான என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அரசியல் சம்பந்தமாக இந்த படத்தில் எதுவும் இருக்காது.

மேலும் சமீபத்தில் அதிகளவு விவாதிக்கப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய்க்கு தருவீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெங்கட் பிரபு கூறுகையில் : எனது படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்றெல்லாம் நான் போட மாட்டேன். “தளபதி விஜய்” என்றுதான் டைட்டில் கார்டில் போடுவேன் அதைத்தான் விஜய்யின் ரசிகர்களும் விரும்புவார்கள். இந்த படத்தில் எந்த ஒரு அரசியல் கண்டன்டும் இருக்காது. முற்றிலும் எனது ஸ்டைலில் ஜாலியான ஒரு படமாக இருக்கும் என வெங்கட் பிரபு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்