- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவி சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமா போன்றவை கைவிட்டாலும்… ரசிகர்கள் கைவிடலையே? - போடு வெடிய…...

டிவி சீரியல் பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமா போன்றவை கைவிட்டாலும்… ரசிகர்கள் கைவிடலையே? – போடு வெடிய… மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் பிரபல நடிகை!

- Advertisement -

ஜி தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகை தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த சீரியலில் பாவாடை தாவணி புடவையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு பின் செந்தூரப்பூவே சீரியலில் ஒரு முக்கியமான கேரக்டரில்ல் அவர் நடித்தார். ஆனால் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு இல்லை. அதன்பிறகு இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சியான விதவிதமான தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தர்ஷா குப்தா இடம்பிடித்தார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பிரபலமானதால் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சமையல் போட்டியாளராக தர்ஷா குப்தா கலந்துக் கொண்டார். ஆனால் அங்கும் அவரால் திறமையை வெளிப்படுத்தவில்லை. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு மிக விரைவில் தர்ஷா குப்தா திரும்பி வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடிகர் ரிச்சார்ட் ரிஷிக்கு அவர் மனைவியாக நடித்தார்.

- Advertisement -

அதன் பிறகு ஓ மை கோட் என்ற படத்திலும் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்போது நடிகர் யோகி பாபுவுடன் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மட்டும் பிரபலமாக இருந்த தர்ஷா குப்தா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு எப்படியாவது பெரிய அளவில் பெயர் பெற்று விடலாம் என்று திட்டமிட்டார். ஆனால் கடந்தாண்டில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷா குப்தா, பிக் பாஸ் வீட்டுக்குள் போன வேகத்திலேயே திரும்பி வெளியே வந்துவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுகிறார். தினமும் கவர்ச்சியான போட்டோக்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு தனது பாலோயர்ஸை தர்ஷா குப்தா உற்சாகப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்காக தனியாக சப்கிரைப் பட்டனை தர்ஷா குப்தா வைத்துள்ளார். இதில் ஸ்பெஷலான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்தி விடுகிறார்.

- Advertisement -

அந்த புகைப்படங்களில் தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை தர்ஷா குப்தா திக்குமுக்காடச் செய்து விடுகிறார். இன்ஸ்டாகிராமில் ஒரு சப்ஸ்க்ரைபருக்கு 499 ரூபாய் வீதம் மொத்தம் 759 சப்ஸ்கிரைபர்கள் மூலம் மாதத்திற்கு மட்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார் தர்ஷா குப்தா. அதாவது சப்ஸ்கிரைபர்கள் வாயிலாக அவருக்கு வங்கி கணக்குக்கு மாதம் ரூ. 3.50 லட்சம் வந்து விடுகிறது.

சினிமாவில் நடித்து சம்பாதிக்க முடியாதால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு சம்பாதிக்கும் நடிகை தர்ஷா குப்தா பெரிய ஆள்தான் என்று பலரும் பாராட்டுகின்றனர். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும் இந்த டிஜிட்டல் கம்ப்யூட்டர் யுகத்தில் இதுவும் ஒரு சூப்பர் வழிதான். நடிகை தர்ஷா குப்தா அந்த சூட்சுமம் தெரிந்த பெண்ணாக இருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கமெண்டுகளில் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்