- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் விஜய் என்ன கூறினார் தெரியுமா... என்ன...

கோட் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் விஜய் என்ன கூறினார் தெரியுமா… என்ன அப்படி சொல்லி இருக்காரு… இது கவனிக்க வேண்டிய விஷயம் தான்பா…

- Advertisement -

வாரிசு, லியோ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜயின் அடுத்த படமாக உருவாகி இருக்கிறது கோட். விஜய்யின் 68வது திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இதனை, வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏற்கனவே பிகில் படத்தை தயாரித்த, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை எடுக்கிறது.

 

- Advertisement -

புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜயை தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் வெங்கட் பிரபு காட்ட இருக்கிறார். இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடிக்கின்றனர்.

 

- Advertisement -

இதுபோக பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல் வைபவ், ஜெயராம், யோகி பாபு, வி டிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், லைலா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். இதில் விஜயை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக, டி ஏஜிங் டெக்னாலஜியை வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார்.

 

இதற்காக அவர் அமெரிக்கா சென்று அங்குள்ள நிறுவனத்தின் உதவியுடன் இப்பணிகளை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல், படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் காட்ட இருக்கிறார்கள். ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. இது போக ஒரு பாடலுக்கு திரிசா நடனமாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்திலிருந்து ஒரு சிறிய வீடியோ வெளியானது. அதில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரே பைக்கில் செல்வது போலவும், அவர்களை ஒரு குழுவினர் பிடிக்க முயற்சிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ரஷ்ய வீதிகளில் இந்த காட்சிகளை வெங்கட் பிரபு படமாக்கி இருந்தார்.

 

அதாவது ரஷ்யாவில் பணியாற்றும் இந்திய அதிகாரியான விஜயை சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பது போன்றும், இதிலிருந்து அவர் எப்படி மீண்டும் வருகிறார் என்பது குறித்தும் இந்த படம் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாதியை விஜய் பார்த்திருக்கிறாராம். இதில் முழுவதுமாக திருப்தி அடைந்திருக்கும் அவர், வெங்கட் பிரபுவிடம் தெறிக்குது என்று கூறி இருக்கிறார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்