- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைந்த மற்றொரு மலையாள பிரபலம்... கச்சிதமாக காய் நகர்த்தும் நெல்சன்...

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைந்த மற்றொரு மலையாள பிரபலம்… கச்சிதமாக காய் நகர்த்தும் நெல்சன்…

- Advertisement -

2023ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது ஜெயிலர் திரைப்படம். தர்பார் அண்ணாத்த என தொடர் தோல்வி படங்களை கொடுத்திருந்த ரஜினிகாந்த்துக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் விஜயை வைத்து பீஸ்ட் என்னும் தோல்வி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சனுக்கும் இந்த திரைப்படம் கம்பேக் கொடுத்தது.

இத்தனைக்கும் மிகவும் சாதாரணமான கதையைத்தான் இதில் எடுத்து இருந்தார் நெல்சன். படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிக கச்சிதமாக அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனிருத்தின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.

- Advertisement -

பான் இந்தியா திரைப்படமாக உருவான ஜெயிலரில், கன்னட திரை உலகில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்திலிருந்து மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ரஜினி உட்பட இந்த மூன்று பேருக்கும் கிளைமாக்ஸ்- இல் மாஸ் காட்சிகளை வைத்திருந்தார் இயக்குனர் நெல்சன். அது ஒன்றே இதன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்து விட்டது.

கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தது. இந்த நிலையில் தான் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

- Advertisement -

இதில் ரஜினிகாந்த் உடன் முந்தைய பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கியது. சென்னை மற்றும் தமிழக கேரள எல்லை பகுதியில் அடுத்தடுத்த படப்பிடிப்புகளை நடத்தினார் நெல்சன். படத்தில் கேரள நடிகர் பகத் பாசில் மற்றும் தெலுங்கு நடிகர் பாலையா ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் மலையாளத்திலிருந்து இன்னொரு நடிகரையும் நெல்சன் தேர்வு செய்திருக்கிறாராம். அதன்படி சூரஜ் வெஞ்சரமூடு இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமான இவர் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்