- Advertisement -
தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்தவர் வத்சலா ராஜகோபால். வயது 93. வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் சென்னையில் இன்று அவர் பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். காலமெல்லாம் காதல் வாழ்க ரிதம் ஜூலி கணபதி அந்நியன் மொழி சதிலீலாவதி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். கடைசியாக கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் நடித்தார். மேலும் ஏகப்பட்ட டிவி சீரியல்களும் அவர் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.




