- Advertisement -
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக நடிகர் அஜீத்குமார் கோலோச்சிய அந்த கால கட்டத்தில் தீபாவளி பொங்கல் தமிழ்புத்தாண்டு என பண்டிகை நாட்களில் அவரது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறினால் அஜீத்குமார் உடனே மறுத்துவிடுவது வழக்கம். என் படம் ரிலீஸ் ஆகும் நாள்தான் என் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் பண்டிகை நாட்களாக இருக்கும் என்று டயலாக் பேசி கெத்து காட்டுவது வழக்கம். தயாரிப்பாளர்கள் கெஞ்சி கூத்தாடி பண்டிகை நாளுக்கு ரிலீஸ் செய்ய அவரிடம் கோரிக்கை வைப்பது பலமுறை நடந்துள்ளது. ஆனால் இப்போது தயாரிப்பாளராக அஜீத்குமார் நடிக்கும் டேர்டெவில் படத்தை 2027ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வருகிற தமிழ் புத்தாண்டுக்கு தான் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் கல்லா கட்ட முடியும் என்று படக்குழுவினரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





