- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது அரசியல் களத்தில் திடீரென எம்ஜிஆரை கொண்டு வந்தது ஏன்? தளபதி விஜய் போடும் மாஸ்டர்...

தனது அரசியல் களத்தில் திடீரென எம்ஜிஆரை கொண்டு வந்தது ஏன்? தளபதி விஜய் போடும் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

சினிமா மற்றும் அரசியல் இந்த 2 துறைகளிலுமே மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் காட்டியவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் என இன்றும் ரசிகர்களால் தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவர் யாரென்றால் அது சந்தேகமே இல்லாமல் அன்பு தலைவர் எம்ஜிஆர்தான். கடந்த 1987ம் ஆண்டில் அவர் இறந்தாலும், 38 ஆண்டுகளாக இன்றும் அவரது புகழ் சிறிதும் மங்கவில்லை என்பதே உண்மை.

நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சி துவங்கி அரசியலுக்குள் வந்த போது அவரை கருப்பு எம்ஜிஆர் என்றனர். அதே போல் எம்ஜிஆரின் கொள்கைகளை தான் விஜயகாந்தும் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அப்போதைய தலைவர்களாக இருந்த தமிழக அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்த தைரியமான அரசியல்வாதி விஜயகாந்த் மட்டும்தான்.

- Advertisement -

எம்ஜிஆரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட அவருக்கு ஜானகி எம்ஜிஆர், பிரசார நேரத்தில் எம்ஜிஆர் பயன்படுத்திய தேர்தல் வாகனத்தை பரிசாக தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாகனத்தில் வந்துதான் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தார். அதே நேரத்தில் தேமுதிக சந்தித்த 2வது சட்டசபை தேர்தலிலேயே திமுகவை பின்னுக்கு தள்ளி எதிர்கட்சி தலைவராகவும் சட்டசபையில் விஜயகாந்த் அமர்ந்தது அரசியல் வரலாற்றில் பேசுபொருளாக இருந்தது.

இப்போது தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் குதித்துள்ள நிலையில் நடிகர் விஜய்க்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருப்பதை, அவரது மாநாடுகளுக்கு வரும் லட்சக்கணக்கான கூட்டத்தை பார்த்தாலே அறிய முடிகிறது. ஆனால் கட்சி துவங்கி ஒன்றரை ஆண்டுகளாக எம்ஜிஆர் குறித்து பேசாதவர், இப்போது எம்ஜிஆர் குறித்து பேசி வருகிறார். தனது ஜனநாயகன் படத்திலும் எம்ஜிஆர் உருவ படத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

தளபதி ரசிகர்களை பொருத்த வரை எல்லாருமே 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர் படைதான். இதில் பலருக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பற்றிய பெரிய தாக்கமும் சிந்தனைகளும் இருக்காது. ஆனால் எம்ஜிஆரை விஜய் இப்போது முன்னிலைப்படுத்த காரணம், எம்ஜிஆர் ரசிகர்களும், அவரது விசுவாசிகளும் தனது பக்கம் வந்துவிட வேண்டும் என்ற நோக்கம்தான்.

எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் பலரும் அதிமுக இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுவது எம்ஜிஆர் மீதுள்ள பற்றில்தான். அதே போல் திமுக அதிமுக விரும்பாத நடுநிலையாளர்களும் எம்ஜிஆர் ரசிகர்களாக தான் இருக்கின்றனர். அதனால் 40 முதல் 70 80 வயதுகளுக்கு உட்பட்ட மக்களின் ஆதரவை தவெக பக்கம் திருப்பவே எம்ஜிஆரை தனது கேடயமாக பயன்படுத்த துவங்கி விட்டார் விஜய் என்று தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்