- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது தல அஜித்துக்கு பலமுறை கதை சொல்ல முயற்சி செய்தாரா அட்லி... அது நடக்காமல் போக...

என்னது தல அஜித்துக்கு பலமுறை கதை சொல்ல முயற்சி செய்தாரா அட்லி… அது நடக்காமல் போக குறுக்கே வந்த கௌசிக் யார் தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய அவர், தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கினார். இந்தி நட்சத்திரம் ஷாருக்கான் வைத்து ஜவான் வெற்றி படத்தையும் அவர் கொடுத்தார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதனையில் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர்,

“நான் ரஜினி சாரோடும் பணிபுரிந்து இருக்கிறேன். விஜய் அண்ணாவுடனும் சேர்ந்து வேலை செய்துள்ளேன். அது நண்பன் திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங். நான் அப்போது மிகவும் சுமாராக இருப்பேன். ஆனால் எனது வேலை விஜய் சாருக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசி நாளன்று என்னை கேரவனுக்குள் அவர் அழைத்தார்.

- Advertisement -

எனக்கு கை கொடுத்து வாழ்த்திய அவர், எதிரே இருந்த நாற்காலியில் அமர சொன்னார். நன்றாக வேலை செய்கிறீர்கள் நீங்கள், ஒரு கதையுடன் வாருங்கள் நிச்சயம் பணிபுரிவோம் என்று விஜய் சார் என்னிடம் கூறினார். அந்த நொடியே நான் அவருக்கு ரசிகர் ஆகிவிட்டேன். அதற்கு முன்பு விஜய் சார் என்று என் மனதிற்குள் இருந்த அவர், அந்த நொடியில் இருந்து அண்ணாவாக மாறினார்.

எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற ஒரு ஸ்கிரிப்ட்டை வைத்துள்ளேன். இது தொடர்பாக சுரேஷ் சந்திரா அண்ணனிடம் இரண்டு, மூன்று முறை தொடர்பு கொண்டு அஜித் சாரிடம் கதை கூற வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் இன்றுவரை அதற்கான நேரம் வரவில்லை. அது எப்போது நடக்கிறதோ, அன்று மிகப்பெரிய சம்பவமாக இருக்கும்.

- Advertisement -

அஜித் சார் ஓகே சொல்லிவிட்டால், நிச்சயமாக இருவரும் இணைந்து பணிபுரிவோம். அவருக்காகவே ஒரு பயங்கரமான ஸ்கிரிப்டை நான் வைத்துள்ளேன். எப்போது அவர் அழைக்கிறாரோ, அன்று நிச்சயமாக இது நடைபெறும். என்னுடைய கடினமான நேரத்தில், என்னை அழைத்து ஆறுதல் கூறியவர் அஜித் சார்.

ஆரம்பம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நயன்தாரா தான், என்னை அஜித் சாரிடம் அறிமுகப்படுத்தினார். என்னை ஒருமுறை பார்த்து விட்டு, ஸ்கூல் முடிச்சிட்டீங்களா, கரெக்டா பண்ணிடுங்க என்று அஜித் சார் கூறினார்” இவ்வாறு அட்லி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேசமயம், அட்லி பேசியதன் மூலம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் விவகாரத்தில் அஜித்தின் உதவி மேலாளர் சுரேஷ் சந்திரா தான் குறுக்கே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்