தீபாவளி பொங்கல் ஆயுதபூஜை விநாயகர் சதுர்த்தி தமிழ் புத்தாண்டு என விசேஷமான பண்டிகை தினங்கள் வந்துவிட்டாலே டிவி சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும் புதிய படங்களையும் ஒளிபரப்புவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ரிலீசாகி சில நாட்களே ஆன, சில வாரங்களே ஆன புத்தம் புதிய படங்கள் கூட பண்டிகை தினங்களில் டிவி சேனல்களுக்கு வந்து விடுகின்றன.
இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகவில்லை. பண்டிகையை முன்னிட்டு தமிழ் டிவி சேனல்களில் வெளியாக உள்ள படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விஜய் டிவியில் நாளை அல்லு அர்ஜூன் ராஸ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்த பிளாக்பஸ்டர் படமாகும். மீண்டும் இந்த படத்தை டிவியில் பார்க்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சுந்தர் சி வடிவேலு நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் விஜய் டிவியில் நாளை மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
அதேபோல் சன் டிவியில் நாளை காலை 10 மணிக்கு நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், இன்றைய குடும்பங்களில் பரிதாபத்துக்குரியவர் கணவனா, மனைவியா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தனுஷ் நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படமும், பிற்பகல் 3 மணிக்கு சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த அரண்மனை 2 படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கே டிவியில் நாளை காலை 7 மணிக்கு நடிகர் கார்த்தி நடித்த தேவ் படமும் காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு படமும் பகல் 1 மணிக்கு சூர்யா நடித்த அயன் படமும் மாலை 4 மணிக்கு விஷால் நடித்த ஆம்பள படமும் இரவு 7 மணிக்கு நடிகர் தனுஷ் நடித்த பட்டாஸ் படமும் ஒளிபரப்பாக உள்ளது. கலைஞர் டிவியில் நாளை காலை 10 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் இவானா நடித்த லவ் டுடே திரைப்படமும் பிற்பகல் 1:30 மணிக்கு நடிகர் சித்தார்த் நடித்த மிஸ் யூ என்ற திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் டிவியில் நாளை மதியம் 12 மணிக்கு திரிஷா நடித்த திரில்லர் திரைப்படம் தி ரூட் என்ற படமும் மாலை 5 மணிக்கு சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படமும் வெளியாகிறது. மேலும் ஜீ திரை தொலைக்காட்சியில் நாளை காலை 9 மணிக்கு அருண் விஜய் பிரியா பவானி ஷங்கர் நடித்த யானை திரைப்படமும், பகல் 1 மணிக்கு சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் படமும் வெளியாகிறது. கலர்ஸ் டிவியில் நாளை காலை 9 மணிக்கு சந்தானம் நடித்த சபாபதி திரைப்படமும் பிற்பகல் 2:30 மணிக்கு மம்முட்டி நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படமும் ஒளிபரப்பாக உள்ளது.





