நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். துவக்கத்தில் ராமராஜன் நடித்த சில படங்களை ரெட் சன் கிரியேசன்ஸ் என்ற பெயரில் தயாரித்தவர்தான் ராஜ்கிரண். அதன்பிறகு என் ராசாவின் மனசிலே என்ற படத்தை தயாரித்து, அவரே நடித்தார். இந்த படத்தை கஸ்தூரிராஜா டைரக்ட் செய்தார். இந்த படத்துக்கு இசையமைக்க முதலில் இளையராஜா மறுத்துள்ளார்.
பலமுறை அலைந்து திரிந்து இளையராஜாவை பார்த்து கெஞ்சிய பிறகும், இளையராஜா மசியவில்லை. அவருடன் இருந்த கவிஞர் வாலி கூறிய பிறகுதான். என் ராசாவின் மனசிலே படத்தை இளையராஜா பார்த்திருக்கிறார். படம் தயாரிப்பு செலவுக்காக ரூ. 25 லட்சத்தை முன்பணமாக கொடுத்த இளையராஜா, பாவலர் கிரியசேன்ஸ் பெயரில் இந்த படத்தை நானே ரிலீஸ் செய்கிறேன் என வெளியிட்டு இருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே, 1990களில் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட படம். ராஜ்கிரண் மாயாண்டி என்ற கேரக்டரில் நடித்திருக்க, மீனா குயிலு என்ற கேரக்டரில் நடித்திருப்பார். கவுண்டமணி, செந்தில் காமெடி சூப்பராக அமைந்து. இந்த படம் ராஜ்கிரணுக்கும், மீனாவுக்கும் குறிப்பாக இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் வடிவேலுவுக்கும் சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனை படமாக அமைந்தது.
அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் ராஜ்கிரணனின் வளர்ப்பு மகள் பிரியா. இவர் கடந்த 2022ம் ஆண்டில், முனீஸ்ராஜா என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் டிவி சீரியல் டைரக்டர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் படத்தில், சம்பந்தம் என்ற கேரக்டரில் வித்யாசமாக நடந்தபடி நடித்திருப்பார்.
இந்த முனீஸ் ராஜாவை, வளர்ப்பு மகள் பிரியா காதலித்து திருமணம் செய்துக்கொண்டதை ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரியா, அதில் தனது தந்தை ராஜ்கிரணிடம் கைகூப்பி கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
"எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம், மன்னிச்சிடுங்க அப்பா!" – ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா#Rajkiran | #MunishRaja | #Priya pic.twitter.com/hIijiYke95
— சினிமா விகடன் (@CinemaVikatan) February 1, 2024
அந்த வீடியோவில் பிரியா, திருமணத்துக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டோம். பிரிந்து சில மாதங்களாகி விட்டது. நாங்கள் செய்துக்கொண்டது சட்டப்படியான திருமணம் அல்ல. நான் எத்தனையோ முறை உங்களை எல்லாம் காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்னை வந்த போது, நீங்கள் என்னை காப்பாற்றினீர்கள். நான் எதிர்பார்க்காமல் கிடைத்த பெரிய கருணை அது. நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி, என அதில் கையெடுத்து கும்பிட்டு கேட்டிருக்கிறார் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. அவர் அழுதபடி மன்னிப்பு கேட்ட அந்த வீடியோ வைரலாகி வருகிறது.





