- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா தீபாவளி பண்டிகைக்கு இத்தனை திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா... ஆனால் அதில் ஒன்று கூட பெரிய...

அடேங்கப்பா தீபாவளி பண்டிகைக்கு இத்தனை திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா… ஆனால் அதில் ஒன்று கூட பெரிய நடிகர்கள் படம் இல்லையேப்பா…

- Advertisement -

பண்டிகை நாளில் எத்தனை கொண்டாட்டங்கள் இடம்பெற்று இருந்தாலும், அன்றைய நாளில் குழுவாக சேர்ந்து திரையரங்குகளுக்கு போய் புது படங்களை பார்க்கும் சந்தோசமே வேறு. தமிழகத்தில் ஆண்டாண்டு காலம் இந்த பழக்கம் தொற்றுக் கொண்டு இருக்க, அதற்கு ஏற்றது போலவே, தீபாவளி பொங்கல் வந்து விட்டால் பெரிய பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களை களத்தில் இறக்குவார்கள்.

ஆனால் சமீப ஆண்டுகளாக அப்படி ஒரு வழக்கம் குறைந்து போய்விட்டது என்றே கூறலாம். முந்தைய ஆண்டுகளைப் போல தற்போது எல்லாம் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது இல்லை. இந்த நிலைமை இந்த ஆண்டு தீபாவளியிலும் தொடர்கிறது என்பது தான் உண்மை.

- Advertisement -

தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் சூழலில் என்னென்ன படங்கள் எல்லாம் வெளியாக போகின்றன என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகிவிட்டது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பணிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று இருக்கிறது. நிதி பிரச்சனை காரணமாக, சூட்டிங் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்த சூழலில் தற்போது அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு முன்னோட்டமும் வெளியாகிவிட்டது. சயின்ஸ் பிக்சன் பாணியில் காதல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் டியூட் திரைப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு தீபாவளி அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுபோக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் திரைப்படமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு களமிறங்குகிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக வருகிறார் துருவ் விக்ரம். அனுபமா பரமேஸ்வரன் ரஜிஷா விஜயன் லால் பசுபதி உள்ளிட்டவரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதியை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் டீசல் திரைப்படமும், தீபாவளி திருநாளை குறி வைத்திருக்கிறது. லப்பர் பந்து வெற்றிக்கு பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு இந்த திரைப்படம் வெளியாவதால் அதன் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபோக கௌதம் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்திருக்கும் கார்மேனி செல்வம் என்ற திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்