- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அஜித்குமாரின் செல்போன் ரிங்க் டோன் இதுதானா... அடடே கேட்கும்போதே புல்லரிக்குதே...

என்னது அஜித்குமாரின் செல்போன் ரிங்க் டோன் இதுதானா… அடடே கேட்கும்போதே புல்லரிக்குதே…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே போற்றும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித்குமார். தமிழ் திரையுலகை தாண்டி இவருக்கு கர்நாடகாவில் ஓரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அஜித்குமாருக்கு பிற மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் என்பது சற்று குறைவுதான்.

இருப்பினும் அவரது புகழ், இந்திய திரை உலகம் எங்கும் பரவி இருக்கிறது. தமிழ் சினிமாவில் அவர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால், குறிப்பிட்ட சில தினங்களிலேயே அது வசூல்மழை குவித்து விடும். குறிப்பாக பிற நடிகர்களின் திரைப்படங்கள் ஐந்து ஆறு நாட்களில் வசூலிக்கும் தொகையை அஜித் திரைப்படங்கள் வெறும் 2 நாட்களில் பார்த்து விடும். அந்த அளவுக்கு அவருக்கு இளைஞர் பட்டாளம் இருக்கிறது.

விளிம்பு நிலையில் இருந்து வெளிவந்த அவர், இன்று பலரும் போற்றும் நட்சத்திரமாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு மட்டுமே அவருக்கு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இருப்பினும் இரண்டுமே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும் பெரிய அளவு கவனத்தில் ஈர்க்கவில்லை.

அதே சமயம், குட் பேட் அக்லி வசூலில் சக்கை போடு போட்டது. அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்ததால், திரையரங்குகளுக்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ்கள் சென்றார்கள். இதனால் இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாகவும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் உடன்தான் கைகோர்த்து இருக்கிறார் அஜித்குமார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கார்பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் அந்த பணிகளை முடித்துவிட்டு அக்டோபர் மாதம் படத்திற்கான வேலையில் இறங்க இருக்கிறார். இந்த நிலையில் ரேசிங் சமயத்தில் அவர் ரசிகர்களை சந்தித்தபோது, அஜித் குமார் செல்போனிலிருந்து ரிங்டோன் ஒலித்துள்ளது. அதைக் கேட்ட பலரும் ஆச்சரியமடைந்து இருக்கிறார்கள். ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த டைகர் கா ஹுக்கும் பாடலைத்தான் அஜித் குமார் ரிங்டோன் ஆக வைத்திருக்கிறார். ரஜினிகாந்தின் ஃபேவரைட் பாடலை அஜித்குமார் ரிங்டோனாக வைத்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

சற்று முன்