- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம்... வந்தாச்சு முழு விமர்சனம்...

எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம்… வந்தாச்சு முழு விமர்சனம்…

- Advertisement -

நடப்பாண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படங்களில் மதராஸியும் ஒன்று. இதற்கு முன்னதாக அமரன் என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்த திரைப்படம், சிவகார்த்திகேயனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது.

ஆக்சன் திரைப்படம் ஆகவும் அதே நேரத்தில், உணர்ச்சிமிக்க காதல் காட்சிகளையும் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியும் இறுதி காட்சியில் கலங்கவும் வைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு என இந்திய சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியது. இப்படியான சூழலில்தான், அவர் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக வந்து மிரட்டிய வித்யூத், வில்லனாகவே இதிலும் இடம்பெற்றார். சென்னை மாநகரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த ஏ ஆர் முருகதாஸ், இதன் திரைக்கதை கஜினி போன்று இருக்கும் என்றும், ஆக்சன் காட்சிகள் துப்பாக்கி போல இருக்கும் எனவும் கூறியிருந்தார். இப்படியான சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்த பலரும், முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி நன்றாக இருந்தாலும் அதன் நீளம் அதிகமாக இருப்பதாகவும் சொல்லி வருகின்றனர்.

- Advertisement -

கடத்தல் துப்பாக்கிகள் சென்னைக்கு கொண்டு வர அதை சிறப்பு படையினர் தடுப்பதும், அதற்கு எதிராக கும்பல் ஒன்று செயல்படுவதும், இவர்களை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதும்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இதன் முதல் பாதியில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அதிலும் இடைவேளை காட்சி மிகவும் அட்டகாசமாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் பாதி மிக நன்றாகவே இருந்தாலும் காதல் காட்சிகள் மட்டும் சற்று நீளமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரகு என்னும் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் இரண்டாம் பாதியை பொருத்தவரை, மிக நீளமான காட்சிகள் நிறைய இருப்பதாகவும், அதை மட்டும் குறைத்து விட்டால் இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்பதும் பலருக்கு கருத்தாக இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் மதராஸி திரைப்படம் நன்றாக இருப்பதாகவே விமர்சனங்கள் வருகின்றன.

- Advertisement -

சற்று முன்