- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன், அமீர் கூட்டணியில் இணையப் போகும் சிம்பு - இது வேற லெவல் சம்பவமா இருக்கே...

வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் இணையப் போகும் சிம்பு – இது வேற லெவல் சம்பவமா இருக்கே பாஸ் – அப்போ வாடிவாசலில் சூர்யா வரமாட்டாரா?

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் இப்போது விடுதலை 2 பாகத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோலில் ஹீரோவாக நடித்த சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமாரும் லெஜண்ட் சரவணனை வைத்து அடுத்த படம் எடுக்க தயாராகி விட்டார். ஆனாலும், இன்னும் விடுதலை படப்பிடிப்பிலேயே வெற்றிமாறன் இருந்து வருகிறார்.

விடுதலை 2 படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால் பேட்ச் ஒர்க் என்று சொல்லப்படுகிற விடுதலை 2 படத்தை முடிக்க மாதக்கணக்கில் நாட்களை ஓட்டும் வெற்றிமாறன், எப்போது வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை துவங்குவார் என்பது யாருக்குமே விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குநர் அமீர், பருத்திவீரன் பஞ்சாயத்து காரணமாக வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பதை சூர்யா விரும்பவில்லை. அதுவும் படத்தில் பல முக்கிய காட்சிகளில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற நிலையில், சூர்யா அமீரை சந்திக்கவே சங்கப்படும் மனநிலையில் இருக்கிறார். அதனால், மோகன்லாலை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க, நான் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்றும் சொல்லியும் பல்ஸ் பார்த்தார் சூர்யா.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த இயக்குநர் வெற்றிமாறன், இந்த படத்தின் டைரக்டர் நான்தான். அமீர்தான் என்னோட சாய்ஸ். வேண்டுமென்றால், நீங்கள் வாடிவாசல் படத்தில் இருந்து விலகிக்கொள்ளுங்கள் என கட் அண்ட் ரைட் ஆகி பதிலடி தந்திருக்கிறார். அதுமட்டுமின்றி அமீருக்கு, சூர்யா தரப்பில், பருத்திவீரன் பட தயாரிப்புக்காக ரூ. 10 கோடி தந்துவிட வேண்டும் என்றும் கண்டிசன் போட்டிருக்கிறார் வெற்றிமாறன்.

- Advertisement -

அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பாரா, அல்லது இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளதால் வாடிவாசலை மறுத்துவிட்டு அந்த படங்களில் நடிக்கச் செல்வாரா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் நடிகர் சிம்பு இணையப்போகிற தகவல் வைரலாக பரவி வருகிறது.

அதாவது மாயவலை என்ற படத்தில் அமீர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்துள்ளார்.இந்த படத்தை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியாகிறது. வாழ்க்கை ஒரு மாயவலை என்ற இந்த டைட்டில் பாடலை, நடிகர் சிம்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியிட உள்ளார். இதற்காக தான் சிம்பு, வெற்றிமாறன், அமீர் கூட்டணியில் இணைய உள்ளார். வடசென்னை படத்தில் முதலில் தனுஷ் கேரக்டரில் நடிக்க இருந்தது சிம்புதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது விரைவில் உறுதியாகும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்