நடிகர் ரஜினிகாந்த் இப்போது தனது 50வது ஆண்டு பொன்விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். கடந்த 1975ம் ஆண்டில் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர், இப்போது 2025ம் ஆண்டில் தனது 50 ஆண்டுகளை நடிகராக நிறைவு செய்திருக்கிறார். விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் அறிமுகமானவர்தான் கவுண்டமணி. அந்த படத்தை இயக்கிய பாரதிராஜாவுக்கு கவுண்டமணியை பார்த்தாலே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் உதவி இயக்குனராக இருந்த கே பாக்யராஜ்தான், பாரதிராஜாவிடம் வற்புறுத்தி அந்த படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்திருக்கிறார்.
அதன்பிறகு கிழக்கே போகும் ரயில் சுவர் இல்லாத சித்திரங்கள் என பல படங்களில் நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். அதுவும் கல்லுக்குள் ஈரம் பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் இதயகோவில் கரகாட்டக்காரன் சின்னகவுண்டர் என பல படங்கள் கவுண்டமணியை ஸ்டார் நடிகராக மாற்றியது. கவுண்டமணி செந்தில் காமெடி ரசிகர்கள் மத்தியில் கொடி கட்டிப் பறந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியதாவது, தமிழ் சினிமாவில் கவுண்மணி அளவுக்கு வடிவேலுவுக்கு செல்வாக்கு இருந்தது இல்லை. ரஜினி ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. திடீர் என்று படக்குழு ஓடி வருகிறார்கள்.
கவுண்டமணி ஒரு மூன்று மணி நேரம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதை ஷூட் பண்ணிடலாமா என்று ரஜினியிடம் அனுமதி கேட்கிறார்கள். உடனே ரஜினிகாந்த் தனது ஷூட்டிங்கை நிறுத்தி விடுகிறார். கவுண்டமணி நடிக்க வேண்டிய காட்சிகளை ஷூட் பண்ணும் வரை காத்திருக்கிறார். அதுவும் சூப்பர் ஸ்டாராக இருக்கிற ரஜினிகாந்த். அப்போது கவுண்டமணி கால்ஷீட் கிபை்பது அவ்வளவு கஷ்டம். அப்படி இருந்தவர் கவுண்டமணி.
அவர் தந்த 3 மணி நேரம் கால்ஷீட்டுக்காக ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணியை நடிக்க வைக்க ஓரமாக உட்கார்ந்துக்கொண்டார். அவர் நடித்துவிட்டு போனார். அப்படி கவுண்டமணி கால்ஷீட் அப்போது கிடைக்காது. அந்தளவுக்கு இருந்த கவுண்டமணியை இன்னிக்கு யாருக்கும் தெரியாது என்று டாக்டர் காந்தராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





