- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள்… கர்நாடக அரசு போட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை -...

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள்… கர்நாடக அரசு போட்ட உத்தரவுக்கு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை – ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம்!

- Advertisement -

கடந்த 30 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் என்பது ஏ சென்டர்களில் அதிகபட்சமாக ரூ. 60 ஆக இருந்தது. பி சென்டர்களில் ரூ. 50 ஆகவும் சி சென்டர்களில் ரூ. 40 ஆகவும் இருந்தது. அதிகபட்சம் 200 ரூபாய் இருந்தாலே ஒரு குடும்பம் ஒரு படத்தை தியேட்டரில் பார்த்து விடலாம் என்ற சூழல் இருந்தது.

ஆனால் இப்போது நகரத்தில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் ஒரு படத்தை தியேட்டரில் பார்க்க விரும்பினால் 2000 ரூபாய் வரை செலவழிக்கும் நிலையே உள்ளது. ஏனெனில் தியேட்டரில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் புதிய படங்களுக்கு ரிலீஸ் நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட உயர்த்தப்படுகின்றன.

- Advertisement -

இதில் தமிழ்நாடு கேரளா ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்களை காட்டிலும் கர்நாடகா மாநிலத்தில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கூட டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி சில வாரங்களுக்கு முன்பு புதிய உத்தரவு ஒன்றை கர்நாடக மாநில அரசு பிறப்பித்தது.

அந்த உத்தரவின்படி அதிகபட்ச கட்டணமாக 200 ரூபாய் என நிர்ணயம் செய்தது. அதே நேரத்தில் 75 இருக்கைகள் கொண்ட பிரிமியர் தியேட்டர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்த ஆணையில் குறிப்பிட்டு இருந்தது. இருந்தாலும் பிவிஆர் சினிமாஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் சங்கத்தினர் கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

- Advertisement -

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அரசின் உத்தரவுக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்துள்ளார். இதையடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மீண்டும் அவர்களது விருப்பம் போல சினிமா டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த ஓஜி என்ற படமும் அடுத்த வாரம் ரிசப் ஷெட்டி நடித்த கன்னட படம் காந்தாரா சாப்டர் 1 படமும் வெளியாக இருக்கின்றன. நீதிமன்றத்தின் புதிய உத்தரவால் அதிகளவில் இந்த படங்கள் பயனடைகின்றன.

கர்நாடகா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது இனிமேல் தான் தெரியவரும். என்றாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அவர்கள் விருப்பம் போல சினிமா டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவில் கூறியதால் காந்தாரா சாப்டர் 1 மற்றும் ஓஜி ஆகிய படங்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ரூ. 1000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கட்டண உயர்வால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைகின்றனர்.

- Advertisement -

சற்று முன்