- Advertisement -
Homeபொழுதுபோக்குபல குழப்பத்திற்கு மத்தியில் தொடங்க உள்ள விடாமுயற்சி ஷூட்டிங், ஆனா அதுலயும் ஒரு குழப்பமாம், இதுக்கு...

பல குழப்பத்திற்கு மத்தியில் தொடங்க உள்ள விடாமுயற்சி ஷூட்டிங், ஆனா அதுலயும் ஒரு குழப்பமாம், இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

- Advertisement -

அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போதுதான் தொடங்குமோ என்ற கவலையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அஜித்தோ இடையில் பல நாடுகளில் பைக் சுற்றுலா சென்றுகொண்டிருந்தார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பானார்கள் என்று கூட கூறலாம். அஜித்தின் போட்டி நடிகரான விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தை முடித்துவிட்டு தனது 68 ஆவது திரைப்படத்தின் பணிகளில் மும்முரமாகிவிட்டார்.

ஆனால் அஜித்திற்கோ 62 ஆவது திரைப்படமே தொடங்கவில்லை எனும்போது ரசிகர்களுக்கு வெறுப்புத்தான் ஏற்பட்டது. எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.

அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடக்கவில்லை, ஹாங்காங்கில் நடக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளதாம். அதே போல் தற்போது மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளதாம்.

அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹாங்காங்கில் நடக்கவில்லை, துபாயில்தான் மொத்தமாக நடக்க உள்ளது என சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறதாம். எனினும் எங்கு நடந்தால் என்ன, “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்தால் சரி என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்களாம்.

“விடாமுயற்சி” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.

சற்று முன்