- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்… என் படங்களின் வெற்றிக்கு அதுதான் காரணம் -...

அந்த படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்… என் படங்களின் வெற்றிக்கு அதுதான் காரணம் – இயக்குனர் சுந்தர் சி போட்டுடைத்த ரகசியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றிப் பட இயக்குனராக சுந்தர் சியை ரசிகர்கள் தயாரிப்பாளர்கள் கொண்டாடி வருகின்றனர். காதல் காமெடி கவர்ச்சி ஃபேமிலி சென்டிமென்ட் என்ற பார்மூலாவில் ரசிக்கும்படியான திரைப்படங்களை உருவாக்கி ரசிகர்களை 2.5 மணி நேரம் கட்டிப்போடும் சூட்சுமம் தெரிந்தவர் இயக்குனர் சுந்தர் சி என்றால் அது மிகையல்ல.

சுந்தர் சி இயக்கிய படங்களை பார்க்கப் போனால் தியேட்டரில் 2.5 மணி நேரம் குடும்பத்துடன் நண்பர்களுடன் நேரத்தை ஜாலியாக கழித்து விட்டு வரலாம் என்ற உத்தரவாதம் இருக்கிறது. நிச்சயமாக அவரது இயக்கத்தில் உருவான படங்கள், தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களை நெளிய வைத்தது இல்லை. கொட்டாவி விட வைத்தது இல்லை.

- Advertisement -

ஏதேனும் ஒரு விதத்தில் திரைக்கதையில் காட்சிகளில் சுவாரசியம் கொண்டு வந்து படம் பார்க்கும் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விடுகிறார். அதே போல் சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடி படம் முழுவதும் நிறைந்திருக்கும். கவுண்டமணி செந்தில் வடிவேலு சந்தானம் மனோபாலா கோவை சரளா என காமெடி குரூப்பை படத்தில் கோர்த்துவிட்டு காமெடி திருவிழாவாக படத்தை மாற்றி விடுகிறார்.

குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு முன்பு 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம் மதகஜ ராஜா. விஷால் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் சோனா சூட் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு தான் வெளியானது. 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி ரூ. 50 கோடி வரை வசூலித்தது. காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காதல் காட்சிகள்தான். தனது படங்களின் வெற்றி குறித்து சுந்தர் சியே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, தமிழ் படங்களில் எனக்கு ரொம்ப பிடித்த படம் பாமா விஜயம். அந்த படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். காமெடி படங்கள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் ஒரு எண்டர்டெய்னர். அதனால் இதுபோன்ற படங்களை நான் மிகவும் விரும்புகிறேன்.

அதே போல் அன்பே வா படமும் எனக்கு ரொம்பவும் பிடித்த படம். காட்சிக்கு காட்சி அந்த படத்தை நான் ரொம்பவும் ரசித்து பார்த்தவன். அன்பே வா படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்பதற்கு கணக்கே கிடையாது. பாமா விஜயம் அன்பே வா போன்ற படங்களில் உள்ள க்யூமர் எனக்கு ரொம்பவும் பிடித்தது. அந்த படங்களின் தாக்கம்தான் எனது படங்களில் இருக்கிறது என்று இயக்குனர் சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்