- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம், இளையராஜா இப்படி உரிமை கொண்டாட இதுதான் காரணம் -...

என் பாடல்கள் எனக்கு மட்டுமே சொந்தம், இளையராஜா இப்படி உரிமை கொண்டாட இதுதான் காரணம் – டைரக்டர் சீமான் சொன்ன புது விளக்கம்!

- Advertisement -

சமீபகாலமாக இசைஞானி இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கி கொள்கிறார். இப்போது அவர் கையில் எடுத்திருக்கும் புதிய பிரச்னை, நான் இசையமைத்த பாடல்கள், எனக்கு மட்டுமே சொந்தம் என்ற அவர் கேட்கும் காப்புரிமை பிரச்னைதான். இதை ஒரு தரப்பினர் ஆதரித்தாலும், ஒரு தரப்பினர் கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே பாடல் வரிகளும், இசையும் கலந்துதான் பாட்டு. இதுகூட தெரியாதவன் அஞ்ஞானி என வைரமுத்து ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதில் இசைஞானியை மறைமுகமாக வைரமுத்து அஞ்ஞானி என கூறியதால், கங்கை அமரன் பொங்கி எழுந்து வைரமுத்துவை கண்டபடி விமர்சித்து, வீடியோ வெளியிட்டதும் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டைரக்டர், நடிகர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திரைப்படங்கள் முன்பு போல இல்லை. ஒரு படத்தை ஒருமுறை டிவி சேனலுக்கு கொடுத்து விட்டால், அதை அவர்கள் பல ஆண்டுகளுக்கு வைத்து ஒளிபரப்புவார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கும், படைப்பாளருக்கும் தொகையாக எதுவும் கிடைக்காது.

நான் இயக்கிய தம்பி படத்தை டிவி சேனலுக்கு தந்த போது 7 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் அந்த படத்தை எத்தனை முறை ஒளிபரப்பு செய்திருப்பார்கள். அப்படி ஒவ்வொரு முறை ஒளிபரப்பிய போதும், வந்த தொகை தயாரிப்பாளருக்கும் இல்லை, இயக்குனருக்கும் இல்லை என்றால் மற்றவர்கள் லாபமடைகின்றனர்.

- Advertisement -

அதனால்தான் இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்கிறார். அவர் பாடலாசிரியருக்கு தர வேண்டாம், தயாரிப்பாளருக்கு தர வேண்டாம் என்று சொல்லவில்லை. எனக்கு கொடுங்கள் என்று அவர் உரிமையை கேட்கிறார். முதலில் வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பான போது, ராயல்டி தரப்பட்டது. இப்போது அப்படி இல்லை. அதனால் தனது பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்கிறார்.

இந்த விவரம் தெரியாததால் பலரும் இளையராஜா ராயல்டி கேட்கிறார் என அவரை பற்றி மிக தவறாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் உண்மை நிலை இதுதான். படைப்பாளிக்கு கிடைக்க வேண்டியது மற்றவர்களுக்கு செல்வதால் தனது உரிமையை இளையராஜா கேட்கிறார் என்று சீமான் கூறியிருக்கிறார்.இவரது புதுவிளக்கம், இளையராஜா கேட்பது நியாயம்தான் என்ற நிலைக்கு வரச் செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்