- Advertisement -
Homeபொழுதுபோக்குபிச்சைக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சசி உடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி... இங்கு படத்தின்...

பிச்சைக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சசி உடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி… இங்கு படத்தின் டைட்டில்தான் மாஸே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க இயக்குனர்களில் ஒருவர் சசி. மற்ற இயக்குனர்களிடமிருந்து, வித்தியாசப்பட்டு இருக்கும் சசி அவரது திரைப்படங்களையும் அப்படியே எடுப்பார். லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த சொல்லாமலே என்னும் திரைப்படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார் சசி. தனது முதல் திரைப்படத்திலேயே டைரக்சனில் திறமையை காட்டிய அவர், குறிப்பிட்ட இடைவெளியில் படம் எடுத்து வந்தார்.

இதில் அவருக்கு ரோஜாக்கூட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஸ்ரீகாந்த் பூமிகா உள்ளிட்டோர் நடித்த அந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. படத்தின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. பிறகு ஜீவாவை வைத்து அவர் டிஷ்யூம் திரைப்படத்தை இயக்கினார்.

- Advertisement -

இதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த வரிசையில் சசிக்கு மிகவும் திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் பூ. எப்போதுமே ஆண்களின் பார்வையில் காதலை கூறி வந்த தமிழ் சினிமாவில் முதல் முறையாக, ஒரு பெண்ணின் பார்வையில் காதலை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் சசி.

தனது முறைமாமன் தங்கராசுவை காதலிக்கும் மாரி எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் மலையாள நடிகை பார்வதி. அவருக்கு தமிழில் அதுதான் அறிமுகப்படம் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார். விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பு பெற்ற பூ திரைப்படம் சசியை அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து சசிக்கு மற்றுமொரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படம் வெளியாகும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம் படம் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பு பெற, பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது பிச்சைக்காரன். இதனைத் தொடர்ந்து சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கினார் சசி.

இந்தப் பக்கம் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் விஜய் ஆண்டனி. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் சசி – விஜய் ஆண்டனி கூட்டணி கைகோர்த்து இருக்கிறது. இதற்கு நூறு சாமி என தலைப்பு வைத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்