- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரிசு திரைப்படத்தால் பெரும் நஷ்டம்... குட்டையை கிளறிய விநியோகஸ்தர்... கடுப்பில் தளபதி ரசிகர்கள்....

வாரிசு திரைப்படத்தால் பெரும் நஷ்டம்… குட்டையை கிளறிய விநியோகஸ்தர்… கடுப்பில் தளபதி ரசிகர்கள்….

- Advertisement -

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இந்த வருட பொங்கலுக்கு ரிலீசானது. தோழா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த வம்சி அந்த படத்தை இயக்கியதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களின் மீது எழுந்தது. அது மட்டுமின்றி இந்த படத்தில் ஹிட் அடித்தால் தெலுங்கில் தனது மார்க்கெட்டை உயர்த்தி விடலாம் என்ற கணக்கிலும் விஜய் இருந்தார்.

படத்தின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்தது. ஏனெனில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி எந்த நோக்கத்தில் அந்த படத்தை வம்சி எடுத்து இருந்தாலும், இதற்கு மெட்டி ஒலி சீரியலை பரவாயில்லை என்ற தொணியில்தான் அந்த படத்தின் ஸ்கிரீன் ப்ளே இருந்ததாக ரசிகர்கள் ஓப்பனாகவே சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்

அதுமட்டுமின்றி பல வருடங்களுக்கு பிறகு விஜய் படமும் அஜித் படமும் இந்த பொங்கலுக்கு தான் ஒன்றாக ரிலீசானது. அதில் துணிவு படம் கன்டென்ட் ரீதியாக வாரிசை விட ஒரு படி மேலே நின்றதாக பலரும் பேச ஆரம்பித்தனர். இதனால் விஜய் கொஞ்சம் அப்செட் எனவும், அடுத்த படம் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்தன.

நிலைமை இப்படி இருக்க படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக பட தயாரிப்பாளர் தில் ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் கேரள விநியோகஸ்தர் ஒருவர் வாரிசு படம் கேரளாவில் ஆறு கோடி ரூபாய் தான் வசூலித்தது என்றும், அதனால் தன்னுடைய பணம் அவ்வளவு நஷ்டமாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி தன்னுடைய பணத்தில் விஜய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்து விட்டார் என்றும், அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்

மேலும் அந்த கடிதத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்ட பணத்தை விஜய் மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படத்தின் வசூலை ஓட்டிக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் தற்போது கிண்டல் அடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

என்னவெனில் ப்ளூ சட்டை மாறன் எப்போதும் ஜெயிலர் படம் வசூல் குறித்த நிலவரம் வரும்போதெல்லாம் வடை சுடுகிறார்கள் என்ற வார்த்தையை அடிக்கடி ட்விட்டரில் யூஸ் பண்ணிக் கொண்டிருந்தார். தற்போது இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் வாரிசு வசூல் விஷயத்தில், அதுவும் கேரளா விஜயின் கோட்டை என்று கூறப்பட்ட சூழலில் ஒரு விநியோகஸ்தர்களை இப்படி கூறியிருக்கிறார், எனில் விஜய்யும் வாரிசு பட குழுவும் வடை சுட்டு வடை சுட்டு இருக்கிறார்களா என்ற கேள்வியை தொடர்ந்து ட்விட்டரில் எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்