- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க விஜய்… நா வரேன் - திருச்சியில் நாளை சுற்றுப்பயணம் துவங்கும் தவெக தலைவர்...

உங்க விஜய்… நா வரேன் – திருச்சியில் நாளை சுற்றுப்பயணம் துவங்கும் தவெக தலைவர் – அறிக்கையில் தளபதி என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க…!

- Advertisement -

திருச்சியில் நாளை நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் துவங்க உள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். தங்களுக்கென்று உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மனம் அறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக்கழகம் மக்களுக்காக மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது உங்கள் விஜய் நான் வரேன் என்கிற நமது பயணம் தான் தமிழக முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம்.

- Advertisement -

நாளை காலை 10:30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து நமது மதுரை மாநாட்டில் சொன்னது போலவே நம் குடும்ப உறவுகளாகிய உங்களை சந்திக்க உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்க விஜய், நம் கொள்கை தலைவர்கள் தந்தை பெரியார் பெருந்தலைவர் காமராஜர் அண்ணல் அம்பேத்கர் வீரமங்கை வேலுநாச்சியார் மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் மக்களிடம் செல் என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.

ஓர் அரசியல் கட்சியின் தலைவராக நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில் நாம் தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில் மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின் மீது காவல்துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த நமது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அரசியல் நிலைப்பாடுகளை கடந்து தார்மீக கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

- Advertisement -

கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொதுமக்கள் சந்திப்புக்கு ஏதுவாக அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும் ஏற்கனவே பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களை சந்திக்க ஏதுவாக பாதுகாவலர்கள் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளை விதிமுறைகளை கடமை கண்ணியம் மற்றும் ராணுவ கட்டுப்பாட்டுடன் பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இறைவன் அருளால் இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்பு பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உங்க விஜய் நான் வரேன். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்