நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டில், காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் இந்த காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். ஐஸ்வர்யாவுக்கு தனுஷை விட 5 வயது அதிகம் என்றாலும் மகனின் விருப்பத்தை தடுக்க, விருப்பம் இல்லாமல் கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதித்தனர்.
இதையடுத்து 2004 ஆம் ஆண்டில், தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் சிறப்பாக நடந்தது. இதை தொடர்ந்து இருவரும் சந்தோஷமாக தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டனர். யாத்ரா – லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆகினர். தனுஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து, பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை என 2 படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்கள் வெற்றி பெறாத நிலையில், அவ்வப்போது தனுஷ் நடித்த படங்களில் உதவியாளராக, காஸ்ட்யூம் டிசைனராக, அவர் தன் பங்களிப்பை செய்து வந்தார். குசேலன் போன்ற சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தனுஷின் அண்ணன் செல்வராகவனிடமும் உதவி இயக்குனராக பணி செய்தார்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மனமொத்த நிலையில் பிரிவதாக அறிவித்தனர். இது திரைப்பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அழைப்பின் பெயரில் போயஸ் கார்டன் வீட்டுக்கு மருமகன் தனுஷ் சென்றுள்ளார். அப்போது தனுஷிடம் பேசிய ரஜினிகாந்த், குழந்தைகளின் எதிர்காலம் கருதியாவது இருவரும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்று பேசி உள்ளார். ஆனால் இல்லை, இனிமேல் உங்கள் மகளுடன் வாழவே முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக பேசி மறுப்பு தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.
அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் ரஜினி குடும்பத்தார் இது குறித்து பேசி, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்று கேட்டுள்ளனர். அவரும் மறுப்பு தெரிவித்த நிலையில்தான், அதன் பிறகு இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவகாரம் இப்போது வெளிவந்துள்ளது. பெற்றோர் பேச்சை மீறி, ரஜினி சொன்னதை பொருட்படுத்தாமல் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இந்த விவாகரத்து முடிவு எடுத்திருப்பது தெரியயவந்துள்ளது.





