பிரபல திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன் அவருடைய விமர்சனத்தில் எப்போதும் கிண்டலும் நக்கலும் இருக்கும். அதன் காரணமாகவே அவருடைய விமர்சனத்திற்கு பல படைப்பாளிகள் கொஞ்சம் அச்சத்தை கொண்டிருப்பார்கள். ஏனெனில் யார் படம் என்ன படம் என்றெல்லாம் பார்க்க மாட்டார் அவரது மனதுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் வைத்து செய்து விடுவார்.
ஆரம்பத்தில் அவரது விமர்சனங்கள் ரசிக்கப்பட்டாலும் போகப் போக அவர் எல்லை மீறுவதாக சிலர் பேச ஆரம்பித்தனர். அதை நிரூபிக்கும் வகையில் பல படங்களை மகா மட்டமாக பேசியும் நடிகர்களை உருவகேலி செய்தும் விமர்சனத்தை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கு இருந்த மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
இப்படிப்பட்ட சூழலில் சமீபகாலமாக ரஜினிகாந்தையும் அவர் பயங்கரமாக டார்கெட் செய்து வருகிறார். காக்கா, கழுகு கதையை குறிப்பிட்டு அவர் ரஜினிகாந்தை பருந்து என்றும் அவரது ரசிகர்களை 70ஸ் கிட்ஸ் என்றும் கூறுகிறார். நிலைமை இப்படி இருக்க ஜெயிலர் படத்தை தனது விமர்சனத்தில் கிழித்து தொங்க விட்டார் அவர். அதற்கு ரஜினியின் ரசிகர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் எதற்கும் சளைக்காமல் தனது போக்கில் இன்னமும் ட்விட்டரில் ட்வீட்டுகளை போட்டுக்கொண்டிருக்கிறார்.
ரஜினியை மட்டும் இன்றி ரஜினிக்கு சப்போர்ட் செய்பவர்களையும் ப்ளூ சட்டை மாறன் தற்போது டார்கெட் செய்ய ஆரம்பித்து இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். அதன்படி பிரபல விநியோகஸ்தரும் ரஜினிகாந்தின் ஆதரவாளரும் நெருக்கமான நண்பர் என கருதப்படும் திருப்பூர் சுப்ரமணியத்தை விமர்சிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை பகிர்ந்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து, “Flash back: பிகில் படம் பார்க்க சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றும் அவமானம். தியேட்டர் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம். Theatre: Sri Sakthi Cinemas, Thirupur Owner: Thirupur Subramaniam.
Flash back:
பிகில் படம் பார்க்க சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றும் அவமானம்.
தியேட்டர் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்.
Theatre: Sri Sakthi Cinemas, Thirupur.
Owner: Thirupur Subramaniam.தியேட்டரில் நியாயம் கேட்டால்.. குடித்து விட்டு ரகளை செய்வதாக… pic.twitter.com/WmTk9zFXcY
— Blue Sattai Maran (@tamiltalkies) August 13, 2023
தியேட்டரில் நியாயம் கேட்டால்.. குடித்து விட்டு ரகளை செய்வதாக குற்றம் சாட்டுவதா? தைரியமாக கோர்ட்டில் புகாரளித்து அபராதம் விதிக்க வைத்த குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். Do not underestimate the power of common man” என குறிப்பிட்டுள்ளார்.





