தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக உள்ள லோகேஷ் கனகராஜ் விக்ரம் படம் மூலம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு சூப்பர் கம்பேக் கொடுத்தார். ஆனால் ரஜினி நடித்த கூலி படத்தை சொதப்பி விட்டார். வணிக ரீதியாக கூலி லாபத்தை தந்தாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை விரக்தியடைய செய்த படம் கூலி என்பதால் ரஜினிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்திதான் உள்ளது.
இதற்கிடையே 46 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இரண்டு சிகரங்களாக உள்ள ரஜினிகாந்த் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்ல விமானத்தில் கோவைக்கு ரஜினிகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் கமலும் இணைந்து நடிக்கப் போவது உண்மைதான். இன்னும் அந்த படத்தின் இயக்குனர் கதை பிக்ஸ் ஆகவில்லை என்று தெளிவாக கூறிவிட்டுச் சென்றார்.
இதற்கிடையே ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்கப் போகிறார் என்று தகவல் பரவிய நிலையில், நடிகர் ரஜினிகாந்தே இயக்குனர் இன்னும் பிக்ஸ் ஆகவில்லை என்று தெளிவாக கூறியிருந்தார். அதனால் வேறு இயக்குனர்தான் அந்த படத்தை இயக்குவார் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் இப்போது ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்கப் போவது நிச்சயமாக லோகேஷ் கனகராஜ் தான் என்பது உறுதியாகி உள்ளது. இதற்காக கூலி படம் டிஸ்கசன் நடந்த அதே பெசன்ட் நகர் அலுவலகத்தில், ராஜ்கமல் நிறுவனம் சார்பில் லோகேஷ் கனகராஜூக்கு ஆபிஸ் போட்டு கொடுத்து கதை டிஸ்கசன் ஸ்மூத்தாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமலை பொருத்த வரை லோகேஷ் கனகராஜ்தான் அவரது ஒரே சாய்ஸ். ரஜினியிடம் நான் பேசி அவரை சம்மதிக்க வைக்கிறேன். முதலில் நல்லதாக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள் என்று லோகேஷ் கனகராஜிடம் கமல் கூறியிருக்கிறார். கதை ஓகே என்றால் ரஜினி இயக்குனர் யார் என்பது பற்றி யோசிக்க மாட்டார். நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என்று கமல் உறுதியளித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.





