- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் படம்லாம் அழுகாச்சி படம்.. ரஜினி படம்தான் பாசிட்டிவிட்டி.. என்ன ஜெயிலர் பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?

கமல் படம்லாம் அழுகாச்சி படம்.. ரஜினி படம்தான் பாசிட்டிவிட்டி.. என்ன ஜெயிலர் பிரபலம் இப்படி சொல்லிட்டாரு?

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஹுக்கும் மற்றும் களவாணி கண்ணைய்யா ஆகிய இரண்டு பாடல்களை எழுதியவர் சூப்பர் சுப்பு. நெல்சன் மற்றும் அனிருத்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகரான சூப்பர் சுப்பு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் ஹுக்கும் என்ற பாடலை எழுதினார். அந்தப் பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா, பேர தூக்க நாலு பேரு பட்டத்த பறிக்க 100 பேரு குட்டி சுவத்தை எட்டிப் பார்த்தால் உசுர கொடுக்க கோடி பேரு” போன்ற வரிகளை எழுதி அதகளம் செய்தார்

- Advertisement -

பாடலின் வரிகளை கேட்ட ரசிகர்கள் இந்தப் பாடலின் மூலம் ரஜினி மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் விஜய் எல்லாம் சூப்பர் ஸ்டாரே இல்லை என்பதை சூப்பர் சுப்பு வெறித்தனமாக சொல்லி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பலர் கூறிவந்தனர். மேலும் இந்தப் பாடலை எழுதியதற்காக மாலத்தீவில் இருந்தபடி ரஜினிகாந்த்தும் சூப்பர் சுப்புவை வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹுக்கும் பாடலை அனிருத் பெர்ஃபார்மன்ஸ் செய்கையில் பட்டத்தை பறிக்க 100 பேர் என்ற வரியின்போது விஜய்யின் ட்ரேட்மார்க் நடனமான கைகளை நீட்டி தலையை அசைக்கும் ஸ்டெப்பை போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் சூப்பர் சுப்பு. அதனைப் பார்த்த பலரும் இந்த ஸ்டெபின் மூலம் தான் விஜய்யைத்தான் அந்த வரியில் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதை மறைமுகமாக சுப்பு உணர்த்திவிட்டார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் குறித்தும் கமல்ஹாசன் குறித்தும் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான் முதன்முதலில் திரையரங்குகளுக்கு சென்று பார்த்த படம் அபூர்வ சகோதரர்கள்தான். அந்த க்ளைமேக்ஸ் காட்சி ஒரே அழுகாச்சியாக இருந்தது. அப்போ நாம சின்ன குழந்தைதானே என்ன தெரியும்.

அதை பார்த்துவிட்டு பயங்கர அழுகாச்சியா வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்ததும் டெக்கில் அதிசய பிறவி படத்தை போட்டர்கள். அந்தப் படத்தில் ரஜினியோட ஓப்பனிங்கே செம மாஸாக இருக்கும். சிகரெட்டை வாயிலிருந்து எடுப்பார். அப்போ நாம குழந்தைகள்தானே அதை பார்க்கும்போதே கொண்டாட்டமா இருக்கும். சிகரெட் என்றெல்லாம் தெரியாதுதானே. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் ஒரு மனுஷன் எப்டி ஜெயிக்கிறான் பாரு என்ற பாசிட்டிவிட்டி எனக்குள்ள வந்தது” என்றார்.

- Advertisement -

சற்று முன்