- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... தெலுங்கு இயக்குனருடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா... டைட்டிலைக் கேட்டு...

ஏதே… தெலுங்கு இயக்குனருடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா… டைட்டிலைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் நடப்பாண்டு இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு விட்டன. இதில் முதல் திரைப்படம் ஏஸ். ஆறுமுக குமார் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருந்தார். யோகி பாபு காமெடியில் கலக்கி இருந்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் ஓரளவு பேசப்பட்டாலும் அந்த நேரத்தில் இது வெளிவந்தது கூட பலருக்கும் தெரியாது.

இதன் காரணமாக ஏஸ், திரைப்படம் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக பாண்டியராஜ் இயக்கத்தில், தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. நித்யா மேனன் இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

- Advertisement -

கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. பலரும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்க்க சென்றதால், தலைவன் தலைவி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் விஜய் சேதுபதி கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இதில் மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் வேலைகள் முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கலைப்புலி எஸ் தாணு இதனை தயாரித்துள்ளார். பரபரப்பான ஆக்சன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று தாணு குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கு முத்து என்கிற காட்டான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாக hotstar ஓடிடி தளத்தில் இது வெளியாகும் என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கின் புகழ்பெற்ற இயக்குனர், பூரி ஜெகன்நாத்துடன் கைகோர்த்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

தபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்லம்டாக் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்