- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜூன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் - ராக்கா...

அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் – ராக்கா பட இயக்குனர் அட்லியே இந்த விஷயத்தை சொல்லிட்டாரே?

- Advertisement -

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருடன் நடிகைகள் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் மற்றும் விவேக் பிரசன்னா தேனப்பன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

பிளாஸ்ட் படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூனின் மகளாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருந்தார். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் ஒரு ஆவேசமான கேரக்டரில் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பும் ஆக்சன் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

பிளாஸ்ட் படத்தின் அபாரமான வெற்றிக்குப் பிறகு பிஸியான நடிகையாக ப்ரீத்தி முகுந்தன் மாறிவிட்டார். அடுத்ததாக நடிகர் அதர்வாவுடன் இதயம் முரளி என்ற காமெடி கலந்த காதல் படத்தில் அவர் நடித்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் டைரக்ட் செய்துள்ள இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இதயம் முரளி படத்தில் நடித்ததால் டைரக்டர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை நடிகை ப்ரீத்தி முகுந்தன் தவற விட்டுள்ளார். இந்த தகவலை ராக்கா படத்தின் டைரக்டர் அட்லி சமீபத்தில் கூறியிருக்கிறார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அட்லி கூறியதாவது, ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடிக்கிறார். அதோடு சிறப்பாக நடனமும் ஆடக்கூடியவர்.

- Advertisement -

அதனால் தான் ராக்கா படத்தில் அவரை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் இதயம் முரளி படப்பிடிப்பில் ப்ரீத்தி முகுந்தன் பிஸியாக இருந்ததால் நான் கேட்ட தேதிகளில் அவரால் நாட்களை ஒதுக்க முடியவில்லை. ராக்கா படத்துக்கு அவரால் கால்ஷீட் தர முடியாமல் போனது. அதன் காரணமாகவே ராக்கா படத்தில் பிரீத்தி முகுந்தன் நடிக்கவில்லை.

அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் பெமினா ஜார்ஜ் என்பவரை நடிக்க வைத்துள்ளேன் என்று அட்லி இந்த தகவலை கூறியிருக்கிறார். மேலும் இதயம் முரளி படத்துக்குப் பிறகு தமிழில் தாஷமக்கான் என்ற படத்தில் நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் தெலுங்கில் எமோ எமோ இடி என்ற படத்திலும் இந்தியில் நாக்ஜில்லா என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -

சற்று முன்