- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிக்கப் போவது அனல் பறக்கும் அரசியல் காட்சிகளா? விறுவிறுப்பான மந்திர காட்சிகளா? - வரும் ஜனவரி...

ஜெயிக்கப் போவது அனல் பறக்கும் அரசியல் காட்சிகளா? விறுவிறுப்பான மந்திர காட்சிகளா? – வரும் ஜனவரி 9ல் ஜனநாயகனுடன் மோதும் தி ராஜாசாப் படம் டிரெய்லர் வெளியீடு!

- Advertisement -

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படங்களில் நடித்த பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நடிகராக இந்திய அளவில் கவனம் பெற்று விட்டார். தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் பிரமாண்ட கதைகளில் அவர் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது கல்கி படத்தில் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் இருந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய நாயகி நடிக்க உள்ளார். இதில் வில்லனாக நடிகர் கமல் நடிக்கிறார். முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்த கமல்ஹாசன், 2ம் பாகத்தில் வரும் காட்சிகள் 90 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் என்ற தெலுங்கு திரைப்படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் பர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வீடியோ சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வருகிற 2026ல் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி தி ராஜா சாப் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் கேரளா உள்ளிட்ட பல பகுதியில் நடைபெற்றது.. இந்த மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக திரில்லர் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

குறிப்பாக மந்திரவாத மாயஜால கட்சிகள் படத்தில் அதிகமாக வருகின்றன. திகில் காட்சிகளும் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் பிரபாஸூடன் மாளவிகா மோகனன் நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பி ஜி விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் பான் இந்தியா படமாக இந்தி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தி ராஜா சாப் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் வரும் காட்சிகளை பார்க்கும்போது இது மந்திரவாத மாயஜால கதைக்களத்தில் உருவான திரில்லர் படம் என்பது உறுதியாகிறது. தி ராஜாசாப் படம் வெளியாகும் அதே நாளில்தான் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது. இது அரசியல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், மந்திரவாதம் என மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இந்த 2 படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்