- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்திலேயே குழப்பமான ஒரே கதாபாத்திரம் தனுஷ்தான் - உசுருக்கு ஆபத்து இல்லே… இட்லி கடை படத்தை...

படத்திலேயே குழப்பமான ஒரே கதாபாத்திரம் தனுஷ்தான் – உசுருக்கு ஆபத்து இல்லே… இட்லி கடை படத்தை பங்கமாக கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் நேற்று வெளியானது. இந்த படம் குறித்து ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, படத்தின் தொடக்கத்தில் தனுஷ் வெளிநாட்டில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் வேலை செய்கிறார். அந்த ஓட்டலின் உரிமையாளர் சத்யராஜ் அவரது மகன் அருண்விஜய் மகள் ஷாலினி பாண்டே. தனுஷூம் ஷாலினி பாண்டேவும் காதலிக்கிறார்கள். தனுஷ் திறமையான வேலைக்காரர் என்பதால் அந்தஸ்தை பற்றி யோசிக்காமல் தனுஷ் மற்றும் ஷாலினி பாண்டேவுக்கும் திருமணம் செய்துவைக்க சத்யராஜ் சம்மதிக்கிறார்.

ஆனால் அருண் விஜய்க்கு இதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. இந்த சூழலில் கல்யாண தேதி வருகிறது. அப்போது தனுஷின் அப்பா ராஜ்கிரண் இறந்து விடுகிறார். அதனால் தனது தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய சொந்த ஊருக்கு தனுஷ் வருகிறார். ஊருக்கு வந்த பின்னர் ஒரு விஷயத்தை உணர்கிறார். தனது அப்பா அம்மாவின் கடைசி காலத்தில் பக்கத்தில் இல்லாமல் போய்விட்டோம் என்று வருந்துகிறார். தனது அப்பா மிகவும் மதித்த இட்லிகடையை எடுத்து நடத்த யோசிக்கிறார்.

- Advertisement -

இந்த நேரத்தில் கல்யாண தேதி நெருங்கி விட்டது. நீ கிளம்பி வா. இல்லையென்றால் நமது பெயர் கெட்டுப் போகும் என்று அன்பாக கூப்பிடுகிறார்கள். மிரட்டி பார்க்கிறார்கள். ஆனால் தனுஷ் வரமுடியாது என்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அருண் விஜய், தனுஷை பழிவாங்க நினைக்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் கதை. ஒரு குழந்தையை நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளர்த்தால் அந்த குழந்தை எப்படி வளரும்?

பாசத்தைக் காட்டுகிறேன் என்று பெயரில் நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்காமல் ஊதாரியாக வளர்த்தால் அந்த குழந்தை எப்படி வளரும் என்பதை சொல்லும் படமாக உள்ளது. படத்தின் முதல் பாதி மிகவும் உண்மைக்கு நெருக்கமாக எடுத்திருந்தார்கள். பல நல்ல காட்சிகளும் இருந்தது. உதாரணமாக இளவரசு தனது அம்மாவை போய் பார்க்கும் காட்சி, நித்யா மேனன் ஒரு காட்சியில் இட்லி கடையை ஏன் வித்தீங்க என்று சண்டை போடும் காட்சி.

- Advertisement -

ராஜ்கிரண் இறந்த போது அவரது வீட்டில் மாடு கன்று குட்டி போடும். ராஜ்கிரண் தான் மீண்டும் பிறந்து வந்துள்ளார் என்று நினைப்பார்கள். இட்லி கடைக்கு ரெகுலராக வந்து சாப்பிடும் ஒரு பெரியவர் கேரக்டர். சத்யராஜ் ஒரு தொழிலதிபராக என்ன முடிவு எடுக்கிறார், அப்பாவாக என்ன முடிவெடுக்கிறார் என்ற காட்சிகள் எல்லாம் நன்றாக சூப்பராக இருந்தது. இட்லி கடையை பெரிய அளவில் எடுத்துக் கொண்டு போகலாம் என்று தனுஷ் கேட்கும் போது ராஜ்கிரண் முடியாது என்று சொல்லுவார். அதுவும் நன்றாக இருந்தது.

படத்திலேயே மிகவும் குழப்பமான கதாபாத்திரம் என்றால் அது தனுஷ் கதாபாத்திரம்தான். படத்தின் 2ம் பாதியில் பழி வாங்குகிறேன் என்று அருண் விஜய் செய்யும் விஷயங்கள் எல்லாம் 3ம் தரமாக இருந்தது. படத்தில் சில பல குறைகள் இருந்தாலும் ஒரு இயக்குனராக தனுஷிடம் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. வழக்கமாக தனுஷ் படம் என்றாலே இளைஞர்களுக்கான படமாக இருக்கும். ஆனால் இந்த படம் குடும்ப ரசிகர்களுக்கான படம். உசுருக்கு ஆபத்து இல்லை என்று சொல்கிற மாதிரி ஓகே ரகமான படமாக இருக்கிறது என்று ப்ளு சட்டை மாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்