- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களில் இட்லி கடை படம் மொத்த வசூல் நிலவரம்… வியாபாரம் சூடு பிடிக்காம இப்படி...

4 நாட்களில் இட்லி கடை படம் மொத்த வசூல் நிலவரம்… வியாபாரம் சூடு பிடிக்காம இப்படி படுத்து விட்டதே? – ஏமாற்றத்தில் நடிகர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படம் இட்லி கடை. முருகன் என்ற கேரக்டரில் இந்த படத்தில் இட்லி கடை நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நித்யாமேனனும் நடித்திருந்தார். திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இந்த படத்தில் இணைந்திருந்தது. படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார்.

மேலும் சத்யராஜ் பார்த்திபன் ராஜ்கிரண் அருண்விஜய் இளவரசு ஷாலினி பாண்டே என முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் இட்லி கடையை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. மேலும் அப்பா மகன் சென்டிமென்டையும் சொந்த ஊர் உறவுகள் குறித்த எமோஷனலையும் மையப்படுத்திய கதையாக உருவாக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஏற்கனவே ராயன் படத்தில் ஆக்சன் களத்தில் இரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் நடிகர் தனுஷ் அதிரடி என்ற பெயரில் மிகவும் வன்முறையான ஒரு படத்தை தந்துவிட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. அதனால் இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகளை வைத்து எமோஷனலை பிழிந்து தந்திருக்கிறார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை படத்தை தயாரித்திருந்தார். நடிகர் தனுஷின் வுண்டர்ஃபார் நிறுவனமும் இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்து இருந்தன. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

- Advertisement -

முதல் நாளில் இந்த படம் 10.40 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், 2வது நாளில் 6.50 கோடி மட்டுமே வசூலித்தது. நேற்று முன்தினம் காந்தாரா சாப்டர் 1 படம் வெளியானதால் இட்லி கடை வசூல் குறைந்திருக்கலாம் என்று கருதிய நிலையில் 3வது நாளான நேற்றும் வசூல் பெரிய அளவில் களை கட்டவில்லை. மொத்தமே 5 கோடி தான் வசூலித்தது.

ஆக மொத்தம் 3 நாட்களில் இட்லி கடை வசூல் 22 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில் இன்றும் 4 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில் மொத்தம் 26 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. எப்படியும் ரூ. 50 கோடியாவது வசூலை எட்டிவிடுமா என்பது தனுஷின் தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 படத்தின் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பியிருப்பதால் இட்லி கடையில் கூட்டமே இன்றி காற்று வாங்குகிறது.

- Advertisement -

சற்று முன்