- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் படங்கள் - பிள்ளையார் சுழி போட்டவர் யார் தெரியுமா? இயக்குனர்...

தமிழ் சினிமாவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் படங்கள் – பிள்ளையார் சுழி போட்டவர் யார் தெரியுமா? இயக்குனர் ஷங்கரின் பின்னால் இருந்த பிரபலம்!

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் தான் பிரம்மாண்ட இயக்குனர் என்று கொண்டாடினார்கள். ஆனால் ஷங்கருக்கே அந்த பிரம்மாண்டம் எனும் ஆர்வத்தை தூண்டி செலவை பத்தியே கவலைப்படாதீங்க என்று தைரியம் கொடுத்து அவரை உருவாக்கி விட்டவர் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தான். அவர் தயாரித்த படங்கள்தான் ஷங்கரின் பிரமாண்ட படைப்புகளாக திரைக்கு வந்தன.

தமிழ் மலையாளம் என சுமார் 350 படங்களை வினியோகம் செய்து நிறைய படங்களை மலையாளம் தெலுங்கு இந்தியில் டப்பிங் செய்து இருக்கிறார். 80களின் இறுதியில் மலையாளத்தில் தயாரிப்பாளர் ஆகி கடந்த 1991ம் ஆண்டில் தான் தமிழ் சினிமாவில் வசந்தகால பறவை என்ற படம் மூலம் தயாரிப்பாளராக கேடி குஞ்சுமோன் அறிமுகமானார்.

- Advertisement -

தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் முதலில் வாய்ப்புக் கொடுத்தது இயக்குநர் ஏ வெங்கடேஷ்க்குத்தான். மகாபிரபு, நிலாவே வா படங்களின் இயக்குநர் அவர்தான். ஆனால் குஞ்சுமோன் விரும்பிய பிரம்மாண்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற கதை ஏ வெங்கடேஷிடம் இல்லாததால் அவர் தனது உதவி இயக்குனர் ஷங்கரை குஞ்சுமோனிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்படி உருவானதுதான் ஜென்டில்மேன் படம்.

ஷங்கரின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்த அந்த நேரத்தில் குஞ்சுமோன் தான் ஷங்கரை நம்பி 1993ல் ஜெண்டில்மேன் படத்தை தயாரித்தார். அடுத்து 1994ல் காதலன் படத்தை தயாரித்தார். அடுத்து 1996ல் காதல் தேசம் படம் மூலம் நடிகர்கள் வினீத் அப்பாஸ் ஆகியோரை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.

- Advertisement -

அன்றைய காலகட்டத்தில் பாலிவுட் நடிகைகள் நட்புக்காகஅல்லது இமேஜ் குறைந்த பிறகு தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார்கள். ஆனால் குஞ்சுமோன் தான் பாலிவுட்டின் உச்சத்தில் இருந்த முன்னணி நடிகைகளுக்கு அப்போதே பல லட்சங்களை அள்ளிக் கொடுத்து ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆட வைக்கும் ட்ரெண்டை உருவாக்கினார்.

1997ம் ஆண்டில் வெளியான ரட்சகன் படம் அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட படம். பட்ஜெட் சுமார் 15 கோடி. நாகார்ஜூனா, மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் தமிழில் அறிமுகமாகினர். ஆனால் 1997ல் பெப்சி வேலை நிறுத்தம் காரணத்தால் தாமதமாகி லாபத்தை அடைய முடியவில்லை, உண்மையில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் குஞ்சுமோனின் பார்மூலாவில்தான், தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற பிள்ளையார் சுழியைப் போட்ட பெருமை குஞ்சுமோனையே சேரும்.

- Advertisement -

சற்று முன்