- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக தலைவர் .விஜயிடம் தொகுதி கேட்ட பிரபலம் இயக்குனர் அல்ல, சட்டசபையில் உளறிக் கொட்டிய அமைச்சர்...

தவெக தலைவர் .விஜயிடம் தொகுதி கேட்ட பிரபலம் இயக்குனர் அல்ல, சட்டசபையில் உளறிக் கொட்டிய அமைச்சர் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை குறித்த விவாதம் ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதில் பேசிய அமைச்சர் புஸ்லி ஆனந்த், சட்டசபை தேர்தலின் போது ஒரு பிரபல இயக்குனர் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் தலைவர் விஜய் அதை தர மறுத்து விட்டார்.

அந்த தொகுதி என் ரசிகனாகவும் கட்சிக்காகவும் உழைத்த ஒரு நிர்வாகிக்கு தான் அந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறிவிட்டார் என்று தனது தலைவர் விஜய் குறித்து பெருமை பொங்க சட்டசபையில் அவர் பேசியிருந்தார். அது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். கிணத்துக்கடவு தொகுதியில் அவர் வாய்ப்பு கேட்டார் என்றும் ஒரு தகவல் வைரலானது.

- Advertisement -

ஆனால் உண்மையில் லோகேஷ் கனகராஜ் அப்படி விஜயிடம் கேட்கவும் இல்லை. அப்படி ஒரு சம்பவமும் இல்லை. உண்மையில் நடந்த சம்பவம் இதுதான். தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். அவர் வினியோகஸ்தராகவும் இருக்கிறார். இப்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.

திரைப்பட தயாரிப்பாளர் ராகுல் தான் தவெக தலைவர் விஜயிடம் தவெக சார்பில் போட்டியிட விரும்பி கேட்டுள்ளார். அவரும் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட விஜயும் ஓகே சொல்லியிருக்கிறார். எனவே வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக ஏற்பாடுகளை அதற்கான ஆவணங்களை ராகுல் தயார் செய்து மனுதாக்கல் செய்ய காத்திருந்துள்ளார்.

- Advertisement -

ஒரு நாள் இரவு 11 மணிக்கு தவெக தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுலுக்கு போனில் அழைத்த தவெக நிர்வாகிகள், சார் மன்னித்து விடுங்கள். ராயபுரம் தொகுதியில் ஒரு மாற்றம் நடந்து விட்டது. ராயபுரம் தொகுதியில் நீண்ட காலமாக ரசிகர் மன்றத்திலும் விஜய் மக்கள் இயக்கத்திலும் இருந்த கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு தான் சீட் வழங்கப்பட வேண்டும் என்று புஸ்லி ஆனந்த் ஒற்றை காலில் நிற்கிறார்.

அதனால் அந்த தொகுதியை உங்களுக்கு தர முடியாது என்று கூறிவிட்டனர். அதன்பிறகு தயாரிப்பாளர் ராகுல் ராயபுரம் தொகுதியில் நிற்காமல் தவெக கட்சி நிர்வாகி வேட்பாளராக நிறுத்தப்பட்டதாக இந்த தகவலை மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்று கூட தெரியாமல் அமைச்சர் புஸ்லி ஆனந்த் இப்படி சட்டசபையில் உளறி கொட்டியிருக்கிறாரே என்று பலரும் அவரை கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்