நடிகர் அஜீத்குமார் இப்போது மலேசியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அங்கு இயக்குனர்கள் ஏஏல் விஜய் சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் உள்ளனர். சமீபத்தில் அஜீத்குமாருடன் சிறுத்தை சிவா மலேசியாவில் கார் ட்ரேக்கிங்கில் இருந்த புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலானது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை எப்போதுமே நன்றி மறக்காதவர் என்று ஒரு தகவல் கோலிவுட்டில் இருந்து வருகிறது. தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் வெற்றி தோல்வி எதுமாதிரியான படங்களை தந்தாலும் அதையும் தாண்டி அவர்களுடன் நட்பு பாராட்டுவது அஜீத்குமாரின் பெருந்தன்மை என்று பலரும் சிலாகித்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது வீரம் விஸ்வாசம் விவேகம் வேதாளம் போன்ற தனது படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு தனது படத்தை இயக்க அஜீத்குமார் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் கங்குவா அண்ணாத்த போன்ற மொக்கை படங்களை தந்த சிறுத்தை சிவாவின் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் இப்போது அஜீத்குமார் நடிக்கும் ஒரு விளம்பர படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை அஜீத்குமார் சிறுத்தை சிவாவுக்கு தந்திருக்கிறார். அதன்பொருட்டுதான் அவர் மலேசியாவில் அஜீத்குமாருடன் காணப்படுகிறார். அதே போல் இயக்குனர் ஏஎல் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸ் பைக் ரேஸ் தொடர்பான டாகுமென்ட்ரி படம் ஒன்றை டைரக்ட் செய்கிறார்.
அதனால் அவரும் மலேசியாவில் அஜீத்குமார் செல்லும் இடங்களில் எல்லாம் அவருடன் சென்று கார் ரேஸ் நடக்கும் காட்சிகளை படம்பிடித்து வருகிறார். ஏற்கனவே அஜீத்குமார் பங்கேற்ற ரேஸ் காட்சிகள் ஏராளமாக படம்பிடித்து இருப்பில் உள்ள நிலையில் விரைவில் அது ஒரு டாகுமென்ட்ரி படமாக வெளிவர உள்ளது.
அதே போல் அஜீத்குமார் நடித்த பில்லா படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் தந்துள்ளார். அது கார் ரேஸ்சை மையப்படுத்திய ஒரு திரைக்கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆவணப்படம் விளம்பர படம் திரைப்படம் என அடுத்தடுத்து 3 படங்களில் அஜீத்குமார் ரசிகர்களுக்கு திரையில் காட்சி தர இருக்கிறார் என்பது ஏகே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





