- Advertisement -
Homeபொழுதுபோக்குசீமானை அரசியலுக்கு வாங்க என்று அவர் வீட்டு வாசலில் தமிழ்நாட்டு மக்கள் திரண்டு நின்று...

சீமானை அரசியலுக்கு வாங்க என்று அவர் வீட்டு வாசலில் தமிழ்நாட்டு மக்கள் திரண்டு நின்று அழைத்தார்களா? – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் அவரை அழைத்தார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி கடுமையாக பேசியிருந்தார். மேலும் விஜயை தொடர்ந்து அவர் ஒருமையில் பேசி வருகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ஒரு அரசியல் தலைவரை விமர்சிக்க உரிமை உள்ளது. அதற்காக ஒருமையில் பேசுவதெல்லாம் மிகவும் தவறு. நடிகர் விஜயின் மக்கள் செல்வாக்குக்கு முன் நாம் தமிழர் கட்சி சீமான் எல்லாம் நிற்க கூட முடியாது. விஜய் கால்தூசி அளவுக்கு கூட சீமானுக்கு அவரை விமர்சிக்கிற தகுதி இல்லை.

- Advertisement -

நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்து ஜெயித்துவிடலாம் என்று சீமான் நினைத்தார். அவர் வீட்டு வாசலில் போய் நின்றார். ஆனால் விஜய் புத்திசாலி என்பதால் சீமானை கூட்டணி சேர்க்காமல் ஓரம்கட்டி ஒதுக்கி விட்டார். அதனால் நம்முடைய எண்ணம் ஈடேறவில்லை என்பதால் இப்போது விஜயை கடுமையாக விமர்சிக்கிறார். இது மிகவும் தவறானது.

உன்னை யாருக்கு அரசியலுக்கு வரச்சொன்னது என்று சீமான் விஜயை கேட்கிறார். அதே கேள்வியை நாமும் கேட்கிறோம். சீமானை யார் அரசியலுக்கு வரச்சொன்னது? தமிழ்நாட்டு மக்கள் உங்கள் வீட்டு வாசலில் திரண்டு வந்து நின்று சீமான் ஐயா நீங்க அரசியலுக்கு வாங்க, வந்து தமிழ்நாட்டை காப்பாத்துங்கன்னு சொன்னாங்களா?

- Advertisement -

இலங்கை தமிழர்கள் பிரபாகரன் பெயரை சொல்லிக்கொண்டு சீமான் அரசியல் செய்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் விஜய் அப்படி அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில்தான் அவர் வந்திருக்கிறார். அரசியல்வாதிகள் என்றாலே மாத்தி மாத்தி பேசுவார்கள். ஆனால் சீமான் மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் தனது ஸ்டேண்டை மாத்திக்கொள்கிற அரசியல்வாதியை உலகத்திலேயே பார்க்க முடியாது.

சீமானை பொருத்த வரை ஒரு நேர்மையற்ற மனிதர். ரஜினிகாந்த் ஒருமுறை பேசும் போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது நான் வருகிறேன் என்று அவர் சொன்னார். அப்போது கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் மனச்சாட்சி இல்லாமல் நாகரிகம் இல்லாமல் சீமான் செய்த கமெண்ட் சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கு. நீங்க அங்க போக வேண்டியதுதானே என்று கேட்டார். இப்படி பேசிய பிறகும் ரஜினி ரசிகர்கள் சீமானை சும்மா விட்டிருக்க கூடாது என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்