- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு கேக்காதீங்க. அதுக்கான பதில் இதுதான் - ப்ரொடியூசர் ரவீந்தர் பேட்டி

அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு கேக்காதீங்க. அதுக்கான பதில் இதுதான் – ப்ரொடியூசர் ரவீந்தர் பேட்டி

- Advertisement -

சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி அதிகளவில் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஒருபுறம் ரஜினியின் ரசிகர்கள் ரஜினிகாந்த் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று கூறிவரும் வேளையில் விஜய் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே வாரிசு பட இசை வெளியீட்டு விழாவின் போது நடிகை சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கூறியிருந்தார்.

அவரது அந்த ஒரு ஸ்பீச்சிற்கு பிறகு ரசிகர்கள் பலரும் அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி தான் என்று கூறி வருகின்றனர். அதேபோன்று சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மிஷ்கின் சிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டார் ரஜினி போன்று பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இதுகுறித்த விவாதங்களும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் பிரபல தமிழ் தயாரிப்பாளரான ரவீந்திரனிடம் ஒரு யூடியூப் சேனல் பேட்டியின்போது சூப்பர் ஸ்டார் குறித்த உங்களது கருத்து என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த ரவீந்தர் கூறுகையில் : சூப்பர் ஸ்டார் யார்? என்று கேள்வி கேட்பதே தவறு. ஏனெனில் அது முடிந்து போய்விட்டது சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். வேண்டுமென்றால் அடுத்து ரஜினி யார்? என்று கேள்வி எழுப்புங்கள். கலாநிதி மாறன் சார் கூறியது போலவே 72 வயதிலும் எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் ஹீரோவாகவே நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம், தயாரிப்பாளர்களின் நம்பகமான நடிகர் என இன்றளவு வரை ரஜினி உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.

- Advertisement -

அதேவேளையில் டாக்டர் ரஜினி என்கிற பட்டத்தை அடுத்து யார் கைப்பற்ற போகிறார்கள்? என்று கேளுங்கள் அதுதான் சரியாக இருக்கும். அதே போன்று உலகநாயகன் என்றால் கமலஹாசன் தான் அடுத்த உலக நாயகன் யார்? என்று கேள்வி எவரிடமிருந்தும் எழவில்லை. அதை போன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி எல்லாம் இருக்கவே கூடாது அது கட்டாயம் ரஜினி தான். நான் வெறித்தனமான விஜய் ரசிகராக இருந்தாலும் என்னால் ரஜினிகாந்துடன் விஜய்யை கம்பேர் செய்ய முடியாது. ரஜினி சூப்பர் ஸ்டார், விஜய் ஒரு பெரிய ஸ்டார் என ரவீந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்