- Advertisement -
Homeபொழுதுபோக்குமலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… நடிகர் விஜய்க்கு கோலாலம்பூர் போலீசார் போட்ட கடிவாளம்…...

மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… நடிகர் விஜய்க்கு கோலாலம்பூர் போலீசார் போட்ட கடிவாளம்… டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட சர்ச்சை!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியா நாட்டில் உள்ள கோலாலம்பூர் தலைநகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய் நடிகைகள் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ இயக்குனர் எச் வினோத் உட்பட படக்குழுவினர் 250க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

கோலாலம்பூரில் உள்ள பிரபலமான ஆடிட்டோரியம் ஒன்றில் இந்த விழா விமரிசையாக நடைபெற உள்ளது. சுமார் 85 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இடவசதியுடன் ஒரு பெரிய ஹாலில் இந்த இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் இசை கச்சேரி மற்றும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா என 2 நிகழ்வுகளாக இந்த விழா நடக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் என்பதால் மலேசியாவில் நடக்கும் இந்த விழாவில் அரசியல் எதுவும் பேசக்கூடாது. அரசியல் சார்ந்த கருத்துகள் எதையும் சொல்லக் கூடாது எனவும் கோலாலம்பூர் போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் இப்போது புதிய சர்ச்சை ஒன்றும் எழுந்துள்ளது. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில், சினிமா தியேட்டர்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பது வழக்கம். ஆனால் மலேசியாவிலும் இப்போது அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் 5 நாட்களில் வருகிற 27ம் தேதி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் இசை வெளியீட்டு விழாவுடன் இசை கச்சேரியும் நடத்தப்படுவதால் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் இந்த விழா நடைபெற உள்ளது. அதற்கேற்ப அந்த அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆடிட்டோரியத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் வரை மட்டுமே பார்வையாளர்களாக அமரலாம் என்ற நிலையில் இங்கு முன்வரிசைகளில் விஐபி பார்வையாளர்களுக்கான டிக்கெட் பிளாக்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை நேரில் பார்க்க விரும்பும் மலேசியா தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் இதற்காக செலவழித்து பிளாக் டிக்கெட்டுகளை அதிக விலையில் வாங்கி வருவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்