- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இடங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மாத்திடுங்க, தமிழக முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் பார்த்திபன்...

அந்த இடங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மாத்திடுங்க, தமிழக முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த இயக்குனர் பார்த்திபன் – ‘குடி’ மகன்களுக்கு இப்படி ஆப்பு வெச்சுட்டாரே?

- Advertisement -

தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்த இயக்குனர் பார்த்திபன் அவரிடம் 2 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, முதல்வரிடம் 15 நிமிடங்கள் பேசினேன். இரண்டு கோரிக்கைகள் என் கைவசம் இருந்தது. ஒன்று சற்றே தழும்பித் தள்ளாடியது. அது டாஸ்மாக் பற்றியது. எனவே டாஸ்மாக்கை முழுமையாக ஒழிப்பதில் சாதிக்க முடியாமலே சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளம்.

நாள் முழுக்க கண்களில் ரத்தம் சிந்தி உழைப்பவர்களுக்கு குடி ஒரு உடனடி தீர்வுதானே தவிர அது நிவாரணம் அல்ல. அவர்களுக்கான ஊதியமும் வாழ்க்கை தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதன்பின்பே அவர்கள் பணக்காரர்களைப் போல ஜாலிக்காக மிதமாக குடிக்க பழகுவார்கள். உலகம் முழுக்க தங்கள் குடியை கெடுக்காமல் குடிக்கிறார்கள். நம்மூரில் தான் அதில் குளிக்கிறார்கள்.

- Advertisement -

குடும்பமும் டாஸ்மாக்கும் நடுத்தெருவில் அல்லாடாமல் இருக்க எனக்கு ஒரு யோசனை. பள்ளி கோவில் அருகே இருக்கும் 717 கடைகளை அப்புறப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது. ஆனால் என் யோசனை யாதெனில் ஊருக்கு ஒதுக்கப்புறமாய் இருக்கும் இடுகாடு சுடுகாடு மின்மயானம் உள்ள இடத்தில் அதன் அருகாமையில் மட்டுமே டாஸ்மாக் கடைகளை குடித்தனம் வைக்க வேண்டும்.

பாட்டிலின் மீது எச்சரிக்கை கொடுத்து விற்பதை போல வியாபாரமும் கிடையாது. குடித்தனங்களுக்கும் இடையூறு குறையும். மொடா குடியர்களுக்கு சைக்காலஜிக்காக ஒரு பயம் வரும். கடைசியாக வரும் இந்த இடத்திற்கு முன்கூட்டியே செல்கிறோமா என்கிற அச்சம் ஏற்படும். தாய்மார்கள் மனைவிமார்கள் கூட, போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய் என்று திருச்சி லோகநாதன் பாடலை அதே ஆபேரி/ மோகனம் ராகத்தில் அல்லது வாய்க்கு வாகான ராகத்தில் கிண்டலாய்ப் பாடி மெகா குடிமகன்களை திருத்தப் பார்க்கலாம்.

- Advertisement -

இப்படி இன்னும் காமெடியாய் நான் சொல்லச் சொல்ல சிரித்தார். யோசிப்பதாக சொன்னார். அடுத்து என் மகள் கீர்த்தனாவின் விண்ணப்பம். தெருவில் அன்புக்காக அல்லாடும் ஜீவன்களுக்கு பொதுமக்களுக்கும் பாதுகாப்புக்காக ஒரு நிலையான நல்வழி செய்து தர வேண்டும் என்பது. அது தொடர்பான விவரமான விண்ணப்பம் இணைத்து அவரிடம் வழங்கப்பட்டது.

நான் ஒரு சோத்துக்கட்சி ஆயுட்கால உறுப்பினன். வறுமை கோட்டை அழித்து சாதி மத பேதம் அற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. அதைத்தான் ஆட்சியாளர்களிடம் மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்ப்பது. நேரத்திற்கு நன்றி தெரிவித்து நேரத்தோடு கிளம்பினேன் மகிழ்வாய் என்று நடிகர் பார்த்திபன் முதல்வரிடம் வைத்த தனது கோரிக்கைகள் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்