- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு - அந்த இயக்குனருக்கு 2வது...

நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – அந்த இயக்குனருக்கு 2வது படத்திலேயே இப்படி ஒரு ஜாக்பாட்டா?

- Advertisement -

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2017ம் ஆண்டில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து 26 படங்களில் கார்த்தி நடித்த நிலையில் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை தந்தன.

ஆனால் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் மிக மோசமான தோல்வியை தழுவியது. கடைசியாக வெளியான மெய்யழகன் படம் கார்த்தி அரவிந்த் சாமி கூட்டணியில் நல்ல கவனம் பெற்ற படமாக இருந்தது. மார்ஷல் சர்தார் 2 ஆகிய படங்களில் கார்த்தி தற்போது நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்து நடிக்க உள்ள படம் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான படம் பிளாஸ்ட். அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

நடிகர் அர்ஜூன் நடிகைகள் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஆக்சன் படமாக அதிரிபுதிரி வெற்றியை பெற்றுள்ளது. சுமார் ரூ. 12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ஒரே வாரத்தில் ரூ. 39 கோடி வசூலை அள்ளியிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் ரூ. 50 கோடி வசூலை எட்டிவிடும் என்று உறுதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் முதல் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமே இயக்குனர் சுபாஷ் கே ராஜின் 2வது படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளது. தனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பளித்த தயாரிப்பு நிறுவனத்துக்கே 2வது படத்தையும் இயக்குவது என்ற நன்றி விசுவாசத்துடன் சுபாஷ் கே ராஜூம் ஓகே சொல்லி விட்டார்.

இதையடுத்து சுபாஷ் கே ராஜ் இயக்கும் 2வது படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிளாஸ்ட் படத்துக்கு கிடைத்த சூப்பர் வரவேற்பை அடுத்து நடிகர் கார்த்தி தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிய வந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்