- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதற்காக தான் ரஜினியுடன் நான் நடிக்கிறேன் - ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்...

அதற்காக தான் ரஜினியுடன் நான் நடிக்கிறேன் – ஜெயிலர் 2 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு பெரிய வெற்றியை தந்த படம் ஜெயிலர். ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த லால் சலாம் வேட்டையன் கூலி என 3 படங்களுமே அந்த அளவுக்கு வெற்றிப் படங்களாக இருக்கவில்லை. அதிலும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் என்றாலும் ரஜினிகாந்த் 45 நிமிடங்கள் வரை அந்த படத்தில் வந்தார். ஆனாலும் படம் தோல்வியடைந்தது.

அடுத்து வேட்டையன் படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதில் என்கவுண்டர் போலீஸ் ஆபிஸராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படமும் ரஜினிக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுத் தரவில்லை. இந்த படத்தில் பகத் பாசில் நடிப்பு மட்டுமே ஓரளவு ரசிகர்களுக்கு திருப்தியை தந்தது.

- Advertisement -

தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். பான் இந்தியா படமாக 1000 கோடி ரூபாய் வசூலிக்க போகும் முதல் தமிழ் படம் இதுதான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மிகவும் மோசமான விமர்சனங்ளை பெற்ற கூலி படம் ரஜினிக்கு மிக மோசமான ஒரு தோல்வி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் விநாயகன் சுனில் யோகி பாபு தமன்னா மிர்ணாள் மேனன் சரவணன் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி செராப் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஜெயிலர் படம் மாபெரும் வரவேற்பை பெற்று அப்போது 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அதைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ஜெயிலர் 2ம் பாகத்திலும் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோல்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் சிவராஜ்குமார் இதுகுறித்து பேசியிருக்கிறார்.

நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை விட 2வது பாகத்தில் என்னுடைய கேரக்டரின் நீளம் அதிகமாக இருக்கும். இந்த படத்தில் நடிக்க மொத்தம் 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளேன். ஆனால் ஒரு நாள் மட்டுமே நடித்துள்ளேன். மீதமுள்ள 3 நாட்களுக்கான படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது. கன்னடம் தமிழ் சினிமாவுக்கு இடையே நல்லதொரு நட்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கெஸ்ட் ரோல்களில் நான் நடிக்கிறேன் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்