- Advertisement -
Homeபொழுதுபோக்குவடசென்னை படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறனுக்கு போன் செய்து கதறிய சமுத்திரக்கனி; அப்படி என்ன விஷயமா இருக்கும்?......

வடசென்னை படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறனுக்கு போன் செய்து கதறிய சமுத்திரக்கனி; அப்படி என்ன விஷயமா இருக்கும்?… உண்மையை உடைத்த பிரபலம்…

- Advertisement -

பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த அவர், தனுசுடன் இணைந்து நான்கு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அது ஒரு கனாக்காலம் படத்தின் சூட்டிங் போதே, தனுஷிடம் கதையை கூறி ஓகே செய்துவிட்டாராம் வெற்றிமாறன்.

ஆனால் அப்போது அவர் கூறியது பொல்லாதவன் திரைப்படத்தின் கதையை அல்ல. வடசென்னை படத்தின் கதையை. ஆனால் முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நட்சத்திரத்தை வைத்து எடுக்க வேண்டுமா என்று யோசித்த வெற்றிமாறன், வட சென்னை திரைக்கதையிலேயே சிறியதாக இடம் பெற்ற பைக் காட்சியை, முக்கிய களமாக வைத்து பொல்லாதவனை எடுத்தார்.

- Advertisement -

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வெற்றிமாறன் யார் என்பதை திரை உலகிற்கு அடையாளம் காட்டியது. இதன் பிறகு தனுசை வைத்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்ததன் மூலம் தேசிய விருதுக்கான அந்தஸ்தை பெற்றார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கினாலே அந்த திரைப்படம் வெற்றிதான் என்பதை, ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்து வெளியாகிய திரைப்படங்கள் காட்டின. வெற்றிமாறன் தனது கனவு திரைப்படம் வடசென்னைதான் என்று அடிக்கடி கூறுவார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று பலரையும் கவனிக்க வைத்தது. ஆனால் இப்போது வரை அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் வடசென்னை திரைப்படத்தில் வேலு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பவன், அதன் அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வடசென்னையில் அமீர் கதாபாத்திரம் கொலை செய்யப்பட்ட பிறகு, நான் பயத்திலேயே இருந்தேன். எனக்கு என்னமோ நிஜமாகவே கொலை செய்தது போன்ற உணர்வு தான் இருந்தது. போலீஸ் என்னை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே என் மனநிலை இருந்தது. ஒரு முறை வெற்றிமாறனிடம் இதுகுறித்து செல்போனில் பேசிய போது, அவர் கலகலவென சிரித்தார். நீங்களாவது பரவாயில்லை பவன், சமுத்திரக்கனி கால் செய்து கதறுகிறார். என்னை தனியா விட்டு போய்ட்டீங்களே என்று சமுத்திரகனி வெற்றி மாறனிடம் கூறியதாக பவன் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்