- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ விஷாலை ஜாடை மாடையாக திட்டிய பிரபல இயக்குனர், பொறுமை இழந்த புரட்சி தளபதி...

ஹீரோ விஷாலை ஜாடை மாடையாக திட்டிய பிரபல இயக்குனர், பொறுமை இழந்த புரட்சி தளபதி – படப்பிடிப்பு தளத்தில் நடந்த பயங்கர சண்டை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால். இப்போது தென்னிந்திய திரைப்பட சங்க பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் இப்போது மகுடம் என்ற படத்தில் அவரே ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இயக்கி உள்ளார். அவர் இயக்கி நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் துஷாரா விஜயன் அஞ்சலி முக்கிய கேரக்டர்களில் நடிததுள்ளனர்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, தாமிரபரணி படம் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு படம். இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்துக்காக அவுட்டோர் ஷூட்டிங் சென்றுவிட்டனர்.

- Advertisement -

அப்போது நடிகர் விஷாலுக்கு ஒரு சுமாரான ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்துள்ளனர். சரி பரவாயில்லை என்று விஷாலும் ஏற்றுக்கொண்டு அந்த ரூமுக்கு போயிருக்கிறார். அப்போது ரூமுக்குள் போனால் கட்டிலில் படுத்தால் கால் வெளியே தொங்குகிறது. அந்த அளவுக்கு சின்ன கட்டில். 2 சேர்களை போட்டு கால் நீட்டி படுத்திருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் உடம்பில் நம நம என எரிச்சல் ஏற்பட்டதால் மெத்தையை தூக்கி பார்த்தால் 1000 கரப்பான் பூச்சிகள் ஓடியிருக்கிறது. பயங்கரமாக கடுப்பாகி உடனே அந்த ரூமை காலி செய்துவிட்டு லோக்கலில் இருந்த வேற ஒரு பெரிய ஓட்டலுக்கு ஷிப்ட் ஆகி விஷால் போயிட்டார்.

- Advertisement -

இந்த தகவல் நைட்டோடு நைட்டாக ஹரிக்கு போய்விட்டது. ஹீரோ ரூமை காலிசெய்துவிட்டு போயிட்டார் என்று சொல்லி விட்டனர். அது எப்படி நான் சொன்ன ஓட்டலை விட்டுட்டு அவர் வேற ஓட்டலுக்கு போகலாம்? இதனால் பட்ஜெட் தானே அதிகமாகும் என்று ஹரி பேசியிருக்கிறார். காலையில் இதுகுறித்து ஜாடை மாடையாக நடிகர் விஷாலை இயக்குனர் ஹரி திட்டியிருக்கிறார்.

அங்கிருந்த அசிஸ்டென்ட் டைரக்டரை உதவியாளரை திட்டுவது போல் அவர் செய்திருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் விஷால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி லபோ திபோ என மோசமாக கத்தியதால் அங்கே அது ஒரு பெரிய பிரச்னையாகி விட்டது. சில ஹீரோக்களுக்கு ஹரி ஒரு முசுடு பொறுத்துக்கொண்டு தான் நடிப்பார்கள் என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் தாமிரபரணி பூஜை ரத்னம் என 3 படங்களில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்