சில படங்களில் நடித்திருந்தாலும் நல்ல கேரக்டர்களில் நடிக்கும் போது அந்த நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடையாளத்தை பெற்று விடுகின்றனர். அப்படி ஒருவர்தான் நடிகை சுதா சந்திரன். தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் மராத்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை சுதா சந்திரன்.
மும்பையில் பிறந்த இவர், சிறுவயதிலேயே குடும்பத்துடன் திருச்சிக்கு வந்துவிட்டனர். அவருடைய 17வது வயதில் திருச்சியில் நடந்த விபத்தில் அவரது கால் பாதிக்கப்பட்டது. காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர் கூறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கால் பொருத்தப்பட்டது.
சமீபத்தில் நடிகை சுதா சந்திரன் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, அந்த விபத்துக்கு பிறகு என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் நினைத்தேன். என்னால் நடக்க முடியாது என தெரிந்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
என் குடும்பம்தான் எனக்கு அப்போது ஆதரவாக இருந்து என்னை வழி நடத்தியது. அவர்களால்தான் நான் மீண்டு வந்தேன் என்று சுதா சந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தமிழில் தர்மம் படத்தில் என்ற அறிமுகமான நடிகை சுதா சந்திரன், நம்பினோர் கைவிடுவதில்லை வசந்த ராகம் சின்னத்தம்பி பெரியதம்பி சின்னப்பூவே மெல்லப்பேசு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் விஷால் நடித்த சத்யம் மற்றும் வேங்கை, சாமி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நாகினி கலசம் தென்றல் தெய்வம் தந்த வீடு லட்சுமி ஸ்டோர் கண்ணெதிரே தோன்றினாள் போன்ற டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டில் உதவி இயக்குனர் ரவி என்பவரை காதலித்த சுதா சந்திரன், திருமணம் செய்து கொண்டார். ஆனால் 60 வயதுகளை கடந்த நிலையில் சுதாவுக்கு குழந்தைகள் இல்லை.
அவரது 30 வருட குடும்ப வாழ்க்கையில் குழந்தை வேண்டாம் என்று சுதா சந்திரனும் அவரது கணவர் ரவியும் ஒரு மனதாக முடிவெடுத்ததால் தற்போது வரை சுதா – ரவி தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட நடிகை சீரியல் நடிகையாக பிரபலமான சுதா சந்திரன் விபத்தில் காலை இழந்து மாற்றுக்கால் பொருத்தப்பட்டவர் என்ற தகவல் ரசிகர்களை திகைப்படைய செய்துள்ளது.





