தமிழ் அரசியல் களத்தில் எம்ஜிஆர் விஜயகாந்த் இருவருக்கு பிறகு நடிகர் விஜய்க்கு தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரபல நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்தும் இந்த வரவேற்பை மக்களிடம் பெற முடியவில்லை.
அதிலும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். இப்போது திமுக ஆதரவில் ராஜ்யசபா எம்பியாக வலம் வருகிறார். சிவாஜி கணேசன் சரத்குமார் கே பாக்யராஜ் நவரச நாயகன் கார்த்திக் டி ராஜேந்தர் மன்சூர் அலிகான் கருணாஸ் என பல நடிக்ரகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தும் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.
வருகிற 2026ம் ஆண்டில் விஜய் ஆட்சியை பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பிரபல ஜோதிடர் ஷெல்வி, நடிகர் விஜயின் ஜாதகம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது ஜோதிடர் ஷெல்வி கூறியதாவது, நடிகர் விஜயின் ஜாதகம் குறித்து நான் பலமுறை பேசி இருக்கிறேன். கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து அவருடைய ஆட்டம் ஆரம்பித்து விட்டது.
எந்த கட்சி சார்ந்தவராக இருந்தாலும் நடிகர் விஜயை குறைத்து மதிப்பிட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். வருகிற தேர்தலில் விஜய்க்கும் தமிழகத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கும் தான் நேரடியாக போட்டி ஏற்படும்.
நடிகர் விஜயின் ஜாதகம் நீச்சமகா ராஜா யோகம் கொண்டது. அவரது நீச்சமகா ராஜயோகம் சரியான நேரத்தில் வேலை செய்யும்.
அவரின் ஜாதகம் அவரை தோற்கடிக்காது. என்னுடைய கருத்துப்படி வலிமைமிக்க ஜாதகமாக விஜயின் ஜாதகம் இருப்பதால் அவரது வாக்கு வங்கி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.அவருடன் வரும் கூட்டணி கட்சிகள், அவருடன் இருப்பவர்கள் என அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.
பிரச்சார நேரத்தில் மட்டும் வாகனத்தில் ஏறாமல் சரியான நேரத்தில் களம் இறங்கி தேர்தலை சந்தித்தால் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கும். 2026ம் ஆண்டில் ‘டாக் ஆஃப் தி இந்தியா’வாக விஜயின் வளர்ச்சி இருக்கும் என்று பிரபல ஜோதிட ஷெல்வி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





