நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இனி அடுத்தகட்டமாக தமிழக அரசியல் களத்திலும் ஜொலிக்க இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், விரைவில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக கட்சி கொடியை அறிமுகப்படுத்த உள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்சம் பெற்றதை போலவே, அரசியலிலும் உச்சம் பெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்ற அரசியல் சூழல் இப்போது நிலவுவதாகவும் தெரிகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் வேண்டும் என்று ஆசைப்படும் மக்களுக்கு, விஜய் நிச்சயமாக ஒரு மாற்றம் தருவார், அவருடன் நாம் தமிழர் கட்சி சீமானும் இணைய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஒரு நல்ல நடிகையாக இருக்கிறார். அட்டக்கத்தி படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இதில் காக்கா முட்டை படத்தில் அவரது 2 பிள்ளைகளுக்கு அம்மா கேரக்டர், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து கனா, நம்ம வீட்டுப் பிள்ளை, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு உள்ளிட்ட படங்கள், ஐஸ்வர்யா ராஜேஷூக்கு முன்னணி நடிகை என்ற அடையாளத்தை தந்தது. இப்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகையாக அவர் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஜிவி பிரகாஷ் குமாருடன் டியர் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியானது. அடுத்து மோகன்தாஸ், கருப்பர் நகரம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். நயன்தாரா, திரிஷா போல, ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் எந்த ஹீரோவுடன் டின்னர் சாப்பிட செல்ல உங்களுக்கு ஆசை என்ற கேள்வியை கேட்ட போது, நடிகர் விஜயுடன் டின்னருக்கு செல்ல ஆசைப்படுகிறேன், என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுவரை விஜயுடன் இவர் ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை என்றாலும், தானும் ஒரு விஜய் ரசிகை தான் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பனாக கூறியது, விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.





