நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் விஜய் இயக்குனர் எச் வினோத் மற்றும் நெல்சன் அட்லி லோகேஷ் கனகராஜ் நடிகைகள் மமிதா பைஜூ பூஜா ஹெக்டே மற்றும் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா நடிகர் நாசர் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான ரசிகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது, நான் ஒரு சிறிய மணல் வீடு கட்டும் நம்பிக்கையுடன் சினிமாத்துறைக்குள் வந்தேன். ஆனால் நீங்கள் எனக்கு ஒரு அரண்மனையே கட்டிக் கொடுத்தீர்கள். என்னை பொறுத்தவரை ஒரே ஒரு விஷயம் தான் முக்கியம்.
முதல் நாளிலிருந்து என் கூடவே இருப்பது என் ரசிகர்கள் தான். ஒரு நாள் ரெண்டு நாள் இல்லைங்க கிட்டத்தட்ட 33 வருஷமாக என் கூடவே நின்னு இருக்காங்க. அதனால் அடுத்த 30 வருஷங்களுக்கு அவங்க கூட நான் நிற்க முடிவு பண்ணி இருக்கேன். எனக்கு ஒண்ணுன்னா ரசிகர்கள் தியேட்டர்ல வந்து நிற்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒண்ணுன்னா நான் அவங்க வீட்ல போய் நிற்க முடிவு பண்ணி இருக்கேன்.
எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்த என் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காக தான் சினிமாவில் இருந்து விலகுகிறேன். இந்த விஜய் சும்மா நன்றின்னு சொல்லிட்டு போறவன் கிடையாது. நன்றிக் கடன் தீர்த்து விட்டுதான் போவேன். சில படங்களின் பெயர்களை கேட்டதும் மலேசியாவின் நினைவு வரும். நண்பர் அஜித் நடித்த பில்லா படம் போல.
நானும் குருவி வில்லு போன்ற படங்களுக்கு மலேசியா வந்திருக்கிறேன். நமக்கு தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆச்சே? வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு எப்போதும் நண்பர்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வலிமையான எதிரி நிச்சயம் தேவை. ஒரு வலிமையான எதிரி இருக்கும்போதுதான் நீங்களும் வலிமை மிக்கவராக ஆகிறீர்கள்.
விஜய் தனியாக வருவாரா? அணியா வருவாரா? என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம்? 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போது கூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்ஸ்சில் தான் கெத்து இருக்கும். வரும் 2026ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது மக்களுக்காக. அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். நன்றி மலேசியா என்று நடிகர் விஜய் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





