தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சோனா. குசேலன் மிருகம் ஒன்பதுல குரு அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துரோகங்கள் சினிமாவில் சந்தித்த வேதனைகள் நம்பிக்கை வைத்தவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து நடிகை சோனா மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் நடிகை சோனா கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையில் நிறைய பேர் துரோகம் செய்திருக்காங்க. அந்த துரோகங்களை எல்லாம் நான் மூட்டையாக இன்னம் சுமந்துக்கொண்டு இருக்கிறேன். நான் யாரிடமும் ரொம்ப சீக்கிரம் கனெக்ட் ஆகிடுவேன். ஆனால் அவர்களை முழுமையாக நம்ப மாட்டேன்.
எப்போதும் ஒரு சந்தேகம் மனசுக்குள் இருந்து கொண்டே இருக்கும். ஏன் அப்படி என்று எனக்கே தெரியாது. ஒருவேளை நான் வாழ்க்கையில் அவ்வளவு அடி வாங்கியதால் இருக்கலாம். என்னிடம் நல்லா பழகினால் நானும் மனதார பழகுவேன். ஆனால் நான் உண்மையாக இருப்பேன். என்னிடம் பழகும் அடுத்தவர்களுக்கும் அப்படித்தான் இருப்பாங்க என்று நினைப்பேன்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகுதான், நான் ஏமாந்துட்டேன் என்பது புரியும். அப்படி பல இடங்களில் நடந்திருக்கிறது. ஆரம்பத்தில் சினிமாவுக்குள் வந்த போது இதுதான் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் பிறகு நடந்த சம்பவங்கள் என்னை ரொம்பவும் பாதித்தது. ஒரு கட்டத்தில் இந்த சினிமாவை வேண்டாம் என்று ஓடிப் போயிட்டேன்.
பிறகுதான் இந்த சினிமா நமக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறது.இதை விட்டு விட்டு எதற்காக ஓடணும் என்கிற கேள்வி எனக்குள் வந்தது. அதற்கு பிறகு தான் மீண்டும் நடிக்க வந்தேன். ஒரு பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் என் வாழ்க்கையில் நிறைய துரோகம் செய்திருக்கிறார். அவருடைய பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை.
அவர் ஏற்கனவே பெரிய பிரபலம்தான். நான் பெயரை சொல்லி அவருக்கு இன்னும் பிரபலம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரால் நான் பட்ட கஷ்டங்களும் மனவேதனைகளும் கொஞ்சநஞ்சம் கிடையாது என்று நடிகை சோனா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படையாக சொல்ல மறுத்துவிட்டார். அந்த நடிகர் யார் என்பது இப்போது இணையத்தில் விவாதமாக மாறியுள்ளது.





