- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியும் குட் பேட் அக்லியும் எப்போதுதான் ரிலீஸ் ஆகும்... வெளிவந்த புதிய தகவல்... ஆர்வம் காட்டுவார்களா...

விடாமுயற்சியும் குட் பேட் அக்லியும் எப்போதுதான் ரிலீஸ் ஆகும்… வெளிவந்த புதிய தகவல்… ஆர்வம் காட்டுவார்களா அஜித் ரசிகர்கள்…

- Advertisement -

அஜித்குமார் மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடா முயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன் த்ரிஷா ரெஜினா ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

- Advertisement -

இதன் படப்பிடிப்பின் போதே பல சிக்கல்கள் இருந்து வந்த சூழலில் அனைத்தையும் கடந்து, அண்மையில் இதற்கான டீசர் வெளியானது. அப்போதே படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். பொங்கல் திருநாளில் விடாமுயற்சி ரிலீஸை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று அவர்கள் எண்ணினர்.

 

- Advertisement -

ஆனால் இதை அத்தனையையும் பொய்யாக்கியது தயாரிப்பு நிறுவனமான லைக்கா. புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி போய் இருப்பதாக தெரிவித்தது. கூடவே புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறியது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல் அஜித் ரசிகர்களை அதிருப்தியை அடையச் செய்தது.

 

ஒரே ஒரு திரைப்படத்திற்காக எத்தனை நாட்கள் தான் காத்திருப்பது என்று அவர்கள் விரக்தி அடைந்தனர். இனி விடாமுயற்சி எப்போது வெளியானாலும் பரவாயில்லை என்றும் சிலர் இணையத்தில் பதிவிட்டதை பார்க்க முடிந்தது. சூழல் இப்படி இருக்க, அனைத்து பிரச்சனைகளையும் முடித்து விடாமுயற்சி திரைப்படத்தை இந்த மாதத்தின் இறுதியிலேயே ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

அதற்கான பணிகள் தற்போது வேகம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோ வீடியோகளுக்கான தணிக்கையும் முடிந்து விட்டது. அதேசமயம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் விடாமுயற்சி திரைப்படம் குறுக்கே வந்ததால், அதற்கான பணிகளை தள்ளிப் போட்டு விட்டார்கள். இப்போது ஏப்ரல் பத்தாம் தேதியை ரிலீஸ் தேதியாக லாக் செய்து இருக்கிறார்கள். அப்போது விடாமுயற்சி வந்தால் கூட பரவாயில்லை என்று முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வரும் நான்கு மாதங்களில், அஜித்திற்கு அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்