மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் புக்கித் ஜலீல் ஆடிட்டோரியத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் படங்களை இயக்கிய அட்லி, மாஸ்டர் லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மற்றும் பீஸ்ட் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் அவர் விஜய் குறித்து மனம் திறந்து பேசினர்.
விழாவில் இயக்குனர் அட்லி பேசியதாவது, விஜய் அண்ணா ஒரு நல்ல மனிதர். அவருடைய உயரத்துக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமில்லை. நான் இயக்குனர் ஆன சமயத்தில் அவர் 50 படங்களை கடந்துவிட்டார். ஆனால் அசிஸ்டெண்டாக இருந்த என்னை கடைசி நாளில் அழைத்து, நல்லா வேலை பண்றீங்க. ஏதாச்சும் கதை இருந்தா சொல்லுங்க அப்படீன்னு சொன்னார்.
எந்த சூப்பர் ஸ்டாரும் அப்படி சொல்ல மாட்டாங்க. இன்னைக்கு என்னிடம் இருக்கிறது எல்லாமே எனக்கு அவரால் வந்தது தான் என்று இயக்குனர் அட்லி பேசியிருக்கிறார். அடுத்து இந்த விழாவில் பேசிய இயக்குனர் நெல்சன் குமார் கூறுகையில், இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மீண்டும் நடித்தால் பீஸ்ட் படத்தில் நடந்தது போன்ற தவறுகள் இல்லாமல் நான் சரி செய்து கொள்வேன் என்று நெகிழ்ச்சியாக பேசினார்.
அடுத்து இந்த விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படம் லியோ படம் இரண்டுமே எனக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்தன. மீண்டும் லியோ 2 படம் எப்போது என்றுதான் என்னிடம் எல்லோருமே கேட்கிறார்கள். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அந்த படத்தை மிகச் சிறப்பாக கொடுப்பேன் என்று பேசியிருக்கிறார்.
அடுத்து ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் விழாவில் பேசியதாவது, இந்த படம் எப்படி இருக்கும் என்று நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. இது ஒரு ரீமேக் படமா, இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம்.
அதனால் உங்கள் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு தியேட்டருக்கு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம். ஆடிப்பாடி கொண்டாடும் விஷயம் நிறைய இருக்கு. உட்கார்ந்து யோசிக்கவும் படத்துல நிறைய விஷயங்கள் இருக்கு என்று எச் வினோத் பேசியிருக்கிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பாடி ரசிகர்கள் மத்தியில் செமையாக வைப் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.





